ஞாயிறு, 8 ஜூலை, 2018

மனதின் வடிவங்கள்

மனம்....... எப்பொழுதும் நம் கூடவே இருக்கும் ....நம்முடனே பேசிக்கொண்டு, நம்மை சீண்டிக்கொண்டு, நம்மை சிக்கலில் மாட்டிவிடும் இந்த மனதை கொஞ்சம் முயற்சி செய்தால் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துவிட முடியும்.

நம் வீட்டை சுத்தம் செய்வது போல் மனதையும் அவ்வப்போது சுத்தம் செய்து கொண்டே இருந்தால் போதும். மனம் தெளிவாக இருக்கும்.. தெளிந்த மனதின் எண்ணங்கள்  நம்மை மகிழ்ச்சியாக வைக்கும்
  மனதை சுத்தப்படுத்துதல் ஒன்றும் பெரிய விசயமில்லை.எளிதானது தான். மூச்சுப்பயிற்சியே போதும்.தினமும் பத்து நிமிட மூச்சுப்பயிற்சி நமக்கு புத்துணர்வு தரும் அருமருந்தாகும்.மூச்சை உள் இழுக்கும் போதும், வெளியிடும் போதும் மூச்சின் மீது கவனம் இருந்தால் போதும். உள் இழுக்கும் போது  நல்ல விசயங்களை நான் உள்ளே இழுக்கிறேன்...வெளியே விடும் போது கெட்ட விசயங்கள் என்னை விட்டு விலகுகின்றன என்று எண்ணம் இருந்தால் போதும்...நம் மனமானது தானே சல்லடையா வேலை பார்க்க  தொடங்கும். தேவையில்லாத எண்ணங்களை தடுத்து நிறுத்தும்.

இந்த பயிற்சியை குறைந்தது 21 நாட்கள் செய்தால் போதும்..பிறகு நாமே நினைத்தாலும் நம்மால் செய்யாமல் இருக்க முடியாது. நன்கு சலித்து எடுக்கப்பட்ட நல்ல எண்ணங்கள்  நல்ல அதிர்வுகளை உருவாக்கும்.இதனால் நம்மை சுற்றிலும் நல்ல விடயங்களே நடக்கும்.

நம் ஆரோக்கியத்திற்காக ,நம் நிம்மதிக்காக ஒரு இருபது நிமிடங்கள் நம்மால் செலவு செய்திட முடியாதா என்ன?இன்றே  முயற்சியைத் தொடங்குவோம்....
வளம் பெறுவோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...