வியாழன், 6 செப்டம்பர், 2018

இயல் எண்களும் தனிச் சிறப்புகளும்

எண்களின் சிறப்புகள்


                 எண்கள்....ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்விலும் இணைந்திருக்கிறது. எண்களை பயன்படுத்தாதவர் எவரும் இல்லை இவ்வுலகில். அவரவர்களுக்கேற்றவாறு எண்களின் உபயோகம் வேறுபடுகிறது அன்றி, எண்கள் இன்றி மனித சமுதாயமே இல்லை என்றே கூறலாம்.
                 எண்கள், ஒன்றின் எண்ணிக்கையை குறிக்க, அளவிட உதவுகிறது. எண்களுக்கான எண்ணுருக்கள் உருவாகும் முன்பே மனிதன் தன் கைவிரல்களின் மூலம் எண்ணத் தொடங்கி விட்டான். எண்ணுருக்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் எண்ணுதல் எளிமையானது.  எழுத்தை விட எண்கள் மனிதனின் வேலையை எளிதாக்கியது.  நடைமுறையில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் எண்கள் இயற்கை எண்கள் அல்லது இயல் எண்கள் என்றழைக்கப்படும் எண்களாகும்.
                 பழந்தமிழ்ச் சமுதாயத்தில் எண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை, எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும், எண் எழுத்து இகழேல் என்ற கூற்றுக்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். கணித மேதை ஆரியபட்டரின் கண்டுபிடிப்பான பூச்சியம் ,கணித உலகுக்குக் கிடைத்த பெரிய வரம்.  இன்று அராபிய எண்கள் என்று அழைக்கப்படும் 1,2,3.... .....எண்வரிசைகளை உலகிற்குத் தந்தவர்கள் இந்தியர்களே   என்பது நாம் எல்லோரும் பெருமை பட வேண்டிய விசயமாகும். எண்கள் இல்லையென்றால் கணிதமே இல்லை என்று கூறலாம். இத்தகைய பெருமை மிகு எண்களில் சில எண்களுக்கென்று உள்ள தனிச் சிறப்புகளை  பாக்கலாம்.

                  ஒன்றை (1) முதல் எண்ணாகக் கொண்டு  தொடங்கும் இயல் எண்களில் சில எண்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்ற எண்களாகும். எடுத்துக்காட்டாக மூன்று, ஐந்து, ஆறு, ஒன்பது,பதினெட்டு. இவற்றின்  சிறப்புகளை  இங்க பாக்கலாம்..

எட்டு...

         இந்த எண்ணை நிறைய பேருக்கு பிடிக்காது .இந்த எண் அபசகுனத்தை  குறிப்பதாக சிலர் எண்ணுவர். ராசியில்லாத எண் என்று சிலர் கருதுவர். அது மிகவும் தவறான கருத்தாகும். உண்மையில் இது  மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு எண். மனிதன் கருவில் இருக்கும் போது எட்டாம் மாதம் தான் முழு வளர்ச்சி அடைகிறான். அளவில் சிறிய கருப்பையில், தன் உடலை குறுக்கிக் கொண்டு குழந்தை படுத்திருக்கும் போது கருப்பை எட்டு போன்றே காணப்படும். அது போல ஒரு மனிதனின் கை அளவு கொண்டு அவன் உயரத்தை எட்டு முறை அளக்கலாம். எண்சாண் உடம்பிற்க்கு சிரசே பிரதானம் என்பதை நாம் எல்லோரும் கேள்விப் பட்டிருப்போம்.

             சைவத்திருமுறைகள் பன்னிரண்டில் எட்டாவது திருமுறையாக போற்றப்படுவது, மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம்.. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்  என்று போற்றப்படுகிறது இந்நூல்.

             இந்திய தத்துவமுறைகளில் ஒன்றான யோகத்தில் எட்டு முறைகள் உண்டு. அஷ்டாங்கா யோகம் என்றழைக்கப்படும் அவை,  இயமம், நியமம், ஆசனன் ,பிராணாயாமம் ,பிரத்யாஹரம், தாரானை, தியானம் ,சமாதி என்பவையே ஆகும். இந்தக் கலையை தொகுத்து வழங்கியவர் பதஞ்சலி முனிவர் ஆவார். யோகக்கலையில் சிறந்து விளங்கும் யோகிகளுக்கு அஷ்டமா சித்திகள் எளிதில் கை கூடும்.

பதினெட்டு:


           இந்த எண்ணிற்க்கு அதிக சிறப்புகளுண்டு. இந்துக்களின் சமய நூலான பகவத் கீதையின் அத்தியாயங்கள் பதினெட்டு. ஆண்கள் மட்டுமே தரிசிக்க முடிந்த சபரிமலை ஐயப்பன் கோயிலின் படிக்கட்டுகள் பதினெட்டு. தலையாய சித்தர்கள் பதினெட்டு, பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு, பதினெட்டு புராணங்கள் ,  பதினெட்டு தத்துவங்கள்,  பதினெட்டு பாடைகள் என்று பதினெட்டாம் எண்ணுக்குரிய சிறப்புகள் பல.

மூன்று

அழகான வடிவத்தைக் கொண்ட மூன்றிற்கு தனிச் சிறப்புகள் உண்டு...
மூன்று உலகங்கள்,[பூதலம்.மீதலம்.பாதலம்] , மும்மூர்த்திகள்[பிரம்மா,விஷ்ணு,சிவன்]
முத்தமிழ்,[இயல் இசை நாடகம்]
 மூன்று காலங்கள்[நிகழ் ,இறந்த,எதிர் காலங்கள்]
கடவுளின் மூன்று நிலைகள்[உருவம்,அரூவம்,அரூவுருவம்],
மூன்று முக்கிய குணங்கள்[சத்துவம்,ராயசம்,தாமசம்]
முக்கியத் தொழில்கள் [படைத்தல்,காத்தல்,அழித்தல்]
மனிதனின மூன்று ஆசைகள் [மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை] முக்கனிகள்[மா,பலா, வாழை]...

ஐந்து:

                ஐம்பெருங்காப்பியகள் [சிலப்பதிகாரம்,மணிமேகலை,சீவக சிந்தாமணி,வளையாபதி, குண்டலகேசி]
பஞ்ச பாண்டவர்கள்,
பஞ்ச பூதங்கள்,[நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்]
ஐந்து வகை நிலவகைகள்.[குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை]..

ஒன்பது

           இந்த எண்ணை பெரும்பாலோர்  பிறரை கேலியாக பேசுவதற்கு தவறாகவே  பயன்படுத்துகின்றனர்.. உண்மையில் இந்த எண் மிகச் சிறப்பு வாய்ந்த எண்ணாகும்..ராமன் பிறந்தது   நவமியன்றுதான். அதாவது ஒன்பதாம் நாள். அந்த நாள் ,ராமநவமி என்று அழைக்கப்படுகிறது  .புத்த மதத்தில் ஒன்பது துறவிகளைக் கொண்டே முக்கிய சடங்குகள் செய்யப்படுகின்றன.
               மேற்கத்தியநாடுகள் சிலவற்றில் இந்த எண் விசேசமாகக் கருதப்படுகிறது. தங்கத்தின் தூய்மைத் தன்மை  999 என்ற அளவுகோல் கொண்டு மதிப்பிடப்படுகிறது.  இந்த ஒன்பது என்ற எண்ணை எந்த எண்ணினால் பெருக்கினாலும்,வரும் எண்ணின் கூட்டுத்தொகை ஒன்பதே ஆகும் .வேறு எந்த எண்ணிற்கும் இந்தச்  சிறப்பு இல்லை.

.          உலக இயக்கத்திற்க்குக்  காரணமான ஆற்றல் நவசக்தி என்று சொல்லப்படுகிறது  நவம் என்றால் ஒன்பது.
 நவகிரகங்கள் [சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு சுக்கிரன்,சனி, ராகு,கேது]
 நவரசங்கள் [மகிழ்ச்சி,வருத்தம்,கோவம்,கருணை,வீரம்,சாந்தம்,அருவருப்பு சிருங்காரம்,அற்புதம் ]
நவமணிகள் [வைரம்,பவளம்,கோமேதகம்,நீலம்,மரகதம்,மாணிக்கம்,முத்து,வைடூரியம் புஷ்பராகம்]
நவதானியங்கள்[நெல்,கோதுமை,துவரை,பாசிப்பயறு,மொச்சை,எள்,கொள்ளு,உளுந்து,வேர்க்கடலை],
உடலில் உள்ள நவதுவாரங்கள் , [,இரண்டு கண்கள்,இரண்டு காதுகள்,இரண்டு நாசி துவாரங்கள்,ஒரு வாய்,இரண்டு மலத்துவாரங்கள் ]
உடலில் உள்ள ஒன்பது சக்கரங்கள் [இரத்தம்,தோல்,மாமிசம்,எலும்பு.மேதஸ்,சுக்கிலம்,மஜ்ஜை,ரோமம்,தேஜஸ் ] பெண்  தன் வயிற்றில் கரு  சுமக்கும் மாதங்கள் ஒன்பது,
 நவகண்டங்கள்,
 நவதீர்த்தங்கள் [இந்துக்களின் புனித நதிகளான,கங்கை,யமுனை,சரசுவதி,காவிரி,நர்மதை,கோதாவரி, சரயு,குமாரி, பயோஷ்னி ]
 நவராத்திரி,[துர்க்கை,இலக்குமி,சரசுவதி தேவியருக்கான ஒன்பது திருநாட்கள்]
 நவ விரதங்கள் [சிவனுக்கான விரதங்கள் ஒன்பது]
            நவம் என்றால் புதுமை என்ற அர்த்தமும் உண்டு. பாரதி தன்னுடைய கவிதைகளை நவகவிதை என்று கூறுவார்.

சுவை புதிது  பொருள் புதிது வளம் புதிது 
சொல் புதிது சோதி மிக்க நவகவிதை  என்கிறார் பாரதி.

இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம்..

         மற்ற எண்களின் சிறப்புகள் அடுத்து வரும் பகுதியில் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...