புதன், 11 ஜூலை, 2018

அமிக்டலா

அமிக்டலா


இந்த வார்த்தையை சில பேர் கேள்விபட்டிருக்கக்கூடும்...பல பேர் இப்பொழுது தான் முதல் முதலாக கேட்கக்கூடும்.  இன்று நான் படித்ததில் என்னை மிக கவர்ந்த வார்த்தை இது.

அமிக்டலா என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம்..இது நமது உடம்பில் இருக்கும் ஓர் உறுப்பு .தலையாய உறுப்பு..நமது மூளை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பகுதி உணர்வுகளின் இருப்பிடமாக இருக்கிறது. மற்றொரு பகுதி அறிவின் இருப்பிடமாகும். இந்த உணர்ச்சிகர மூளை பகுதியைத்தான் அமிக்டலா என்கிறோம்.  இந்த பகுதியில் தான் நமது எதிர்மறை உணர்வுகளான, கோவம்,பயம்,குற்றஉணர்வு,ஆத்திரம், பொறாமை,ஆதிக்கஉணர்வு,ஏமாற்றம், ஆசைகள் அனைத்தும் குடியிருக்கின்றன.நம் பின்னந்தலையில் காதுகளுக்குப் பின்னால் இருக்கக்கூடிய  ஒரு சிறிய நாளமில்லாச் சுரப்பி தான் இது.


ஆனால்,மூர்த்தி சிறிசு..கீர்த்தி பெருசுங்குறமாதிரி இந்த உறுப்பு செய்யும் வேலையோ மிகப்பெரிது... நம் எதிர்மறை சிந்தனைகளின் மொத்த வியாபாரி ..இந்த அமிக்டலாதான்.உணர்வுகளை சேமித்து வைத்து, உணர்வுகளின் அடிப்படையில் நம்மை இயங்கச் செய்வது இந்த பகுதி தான்..நம்மை நமது அறிவின் பிடியிலிருந்து விலக்கி .உணர்வுகளின் தொகுப்பாக நம்மை மாற்றிவிடுகிறது இந்த பகுதி.. இந்தப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து, பகுத்தறிவு கொண்டு நாம் செயல்பட ஆரம்பித்தால் நம் வாழ்க்கை நிம்மதியாகச் செல்லும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...