வியாழன், 12 ஜூலை, 2018

மனம் பறிக்கும் பூனைகள்

சிலருக்கு பூனைகள் பிடிக்கும்...சிலருக்கு பூனைகள்னாலே அல்ர்ஜி..அது முடி கொட்டும்... அது அல்ர்ஜினு சில பேரு பக்கத்துலயே விடமாட்டாங்க....ஆனா எனக்கு பூனைகள்னா ரொம்ப பிடிக்கும்...என்னைக் கவர்ந்த வெள்ளைப் பூனைய பத்தி கொஞ்சம்  உங்ககிட்ட  பகிர்ந்துக்கலாம்னு ஒரு சின்ன ஆசை...


ஐந்து நாள் குட்டியா எங்க வீட்டுக்கு வந்துச்சு.. வந்த அன்னைக்கு அதுனால வழுக்கு தரையில நிக்கக்கூட முடில...அன்னைக்கு இரவு சிவராத்திரியாத்தான் போச்சு...தாயின் பிரிவு ஒரு பக்கம்.... பசி ஒரு பக்கம்...அதுனால தூங்க முடில...சின்ன ஸ்பூன்ல அப்பப்போ கொஞ்ச கொஞ்சமா பால் ஊத்துற  வேலை என் தலைலதான் விழுந்துச்சு...கொஞ்சம் கடுப்போட தான் செஞ்சேன் ரெண்டு மூணு நாளுக்கு....
அப்புறம் என் செல்லப்பிள்ளையாகவே மாறிருச்சு....எனக்கு மட்டுமில்ல.. எங்க குடும்பத்துல இருக்குற எல்லாருக்குமே செல்லம் அந்த பூனை..


அதுக்குனு  பேருனு எதுவும் இல்லனாலும் கூப்பிடுறதுலாம் 'குண்டம்மா' தான்..அந்த வட்டமான் முகம்....பஞ்சுக்கு இணையான அந்த உடல்.....மெல்லிய குரல்....மெத்தெனும் அந்த பாதங்கள்னு கொஞ்ச கொஞ்சமா அதோட வலைல நான் விழ ஆரமிச்சேன்....

அணைப்பு வேண்டி என் மடியில் வந்து படுக்கத்  தொடங்கி....நாளடைவில என் மடி ஒரு  தொட்டிலாவே  மாறிருச்சு...இரவு நேரம்னா  என் கால்களுக்கிடையே வந்து படுத்துக்கும்... குளிர் காலத்துல என் போர்வைக்குள்ள அதுக்கும் ஒரு இடம் கண்டிப்பா இருக்கும்.


வயசு கூடக் கூட குண்டம்மாக்கு சேட்டையும் கூட ஆரம்பிச்சது...தன்னோட தேவைகள உண்ணாவிரதம் மூலமா தெரியப்படுத்துச்சு...அசைவம் இல்லனா சாப்பிடுறதே இல்ல...பால் பக்கம் திரும்பி கூட பாக்குறதில்லனு .. எல்லாவிதத்துலயும்  அஹிம்சை முறைய பின்பற்ற ஆரம்பிச்சுருச்சு... வாரத்துல மூணு நாளு அதுக்கு மட்டும் அசைவ உணவு...அன்னைக்கு மட்டும் அதோட வயிற பாத்தா நல்லா பெருசா இருக்கும்...மத்த நாள்ல சுத்தமா விரதம் இருக்கும்...

 கோவமோ .. மனஅழுத்தமோ எதுவானாலும் அது என்  மடில வந்து  அந்தக் குண்டம்மா உக்காந்ததும் சரியாகிரும். அந்த மென்மை... மடியில் அதன் கனம்... இன்னமும் மனதில் பசுமையாகவே இருக்கிறது.... உன்ன ரொம்ப....ரொம்பவே மிஸ் பண்றேன்டிஎன்  குண்டம்மா....




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...