சனி, 14 ஜூலை, 2018

நம்ம மதுரை

கிழக்கின் ஏதென்ஸ்

எந்த நகரமாக இருக்கும்னு ஊகிக்க முடியுதா உங்களால.?
வேறு எந்த ஊரும் இல்லைங்க.. நம்ம மதுரை நகரம் தான் ஒரு காலத்துல இவ்வளவு பெருமை வாய்ந்ததா இருந்தது.

பழம்பெரும் நகரம்

நகரத்துக்குனு 2500 வருச வரலாறு இருக்குது. தமிழர்களின் பண்பாட்டுத்தலமாகவும் இருந்திருக்கு இந்த நகரம் .வைகை ஆற்றங்கரையில ,கடம்ப மரங்கள் சூழ இருந்த இந்த நகரைச் சுற்றிலும் எண்பெருங்குன்றங்கள் இருக்கு. இந்த குன்றுகளில் சமணத்துறவிகள் தங்கி சமயப்பணி ஆற்றியிருக்கிறார்கள்.
      எண்பெருங்குன்றத்து இருந்தவ முனிவர்
      அறம் பொருள் இன்பம் வீடெனுமி வற்றின்
என்கிறது நாலடியார்...இது போல் நிறைய சான்றுகள் சங்க இலக்கியத்துல இருக்கு..

பாண்டியர்களின் தலைநகராக மதுரை இருந்தது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச விடயம் தான்  அறுபடை வீடுகளில் முதலாம் வீடான  திருப்பரங்குன்றம் மதுரைல தான் இருக்கு.
இந்த மலைக்கு பின்புறம் தென்பரங்குன்றத்தில எட்டாம் நூற்றாண்டைச்  சேர்ந்த குடைவரை  ஒன்று இருக்கு.
9-10 நூற்றாண்டுகளில் சமண மதம்  இங்கே செல்வாக்கோடு இருந்திருக்கு.
மதுரைக்கு ஆலவாய் என்ற பெயரும் உண்டு.திருவாலவாயன் என்ற பெயர் சொக்கனாதரைக் குறிக்கும்
மதுரையின் தொன்மையான பகுதிகளில் ஒன்று மாடக்குளம்.இந்த பகுதியில இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கே ஒரு கண்மாய் உண்டு..மாடக்குளம் கண்மாய். இக் கண்மாய்க்கு அருகில் கபாலி மலை ஒன்று உண்டு.இந்த மலையின் மீது ஏறிப்பார்த்தால் மதுரையை 360 டிகிரி கோணத்துல பாக்க முடியும்..என்ன ஒரு சிரமம் என்றால் 200க்கும் அதிகமான படிகள் உண்டு.

திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் அழகர் மலைத்தொடர் 25 கிலோமீட்டர் தூரத்துல தான் இருக்கு.
சிலப்பதிகார கண்ணகியும் கோவலனும் கவுந்தியடிகளோடு இந்த மலைத்தொடர் வழியாக வந்ததாக சிலப்பதிகாரத்துல சொல்லப்பட்டிருக்கிறது.இந்த மலையில் உள்ள் கல்வெட்டுக்கள் 2200 முன்பாக வெட்டப்பட்டவை.
இங்கே உள்ள தமிழ் பிராமி கல்வெட்டுக்களில் மதிரை என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது.அன்றைய மதுரையின் பெயர் மதிரை என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.அன்றைய மதுரை ஒரு சிறந்த ஒருங்கிணைந்த வணிக வளாகமாக,வர்த்தக சங்கமாக இருந்துவந்துள்ளதை கல்வெட்டுக்கள் மூலம் நான் தெரிந்துகொள்ளமுடிகிறது.

இவ்வாறு மதுரையின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.அத்தகைய  பெருமை வாய்ந்த நகரத்துல நாம் வாழ்வதற்கே மிகவும் குடுத்து வைத்திருக்கவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...