EMOTIONAL BANK ACCOUNT
' எமோஷனல் ஃபேங்க் அக்கவுண்ட்'...புதுசா இருக்குல இது....என்னவா இருக்கும்னு ஒரு ஆர்வத்த தூண்டுதுல .. இப்போ பாக்கலாம் என்னனு....இது ஒண்ணும் பெரிய விசயம்லா இல்லை..நம்மில் சில பேரு ஏற்கெனவே இப்பிடித்தான் இருக்காங்க...இந்த மாதிரி மனிதர்களை நாம் தாண்டித்தான் வந்துருப்போம் நம்ம வாழ்க்கைல... விவரமா பாப்போம் இப்ப..
பொதுவா ஒரு வங்கில நாம என்ன செய்வோம்னு கொஞ்சம் யோசிச்சு பாத்தா இதும் எளிதாக புரிஞ்சுரும். ஒரு வங்கினா பணபரிவர்த்தனை நடக்கும்..பணத்த எடுப்போம்...பிறகு போடுவோம்...பணம் போட்டா அது நம்ம கணக்குல வரவு வைக்கப்படும்...எடுத்தா செலவு கணக்குல வரும். இப்பிடி தான் ஒரு வங்கியோட பரிவர்த்தனைகள் நடந்துகிட்டு வருது... அதே மாதிரி செயல்பாடு தான் இந்த எமோஷனல் ஃபேங்க் அக்கவுண்ட்லயும் நடக்குது.
இங்க நாம பணத்துக்குப் பதிலா நாம மனம் என்கிற கணக்குல வரவு செலவு பரிவர்த்தனைகள் செஞ்சிகிட்டு இருக்கோம்...இப்போ லைட்டா புரியற மாதிரி இருக்கா.. இன்னும் கொஞ்சம் விவரமா பாக்கலாம்.
மனதுல வரவுனா என்னன்னா....ஒருத்தர்கிட்ட நாம் பழகுறப்ப அவுங்க மனசுல
சிலவற்றை வரவு வைக்குறோம்.. நாம காட்டுற அன்பு...மரியாதையா நடக்குறவிதம், உண்மையா இருக்குறது, சொன்ன சொல்ல நிறைவேத்துறது,
மதிப்பு குடுத்தல், விட்டுக் குடுக்குறது, நல்ல செயல்கள் செய்தல்,மற்றவரை புரிந்து நடத்தல்,காயப்படுத்தாமல் இருத்தல்,....இப்பிடி சொல்லிக்கிட்டே போலாம்....
மனசுல செலவு என்னனனா மேலே சொன்ன எல்லாவற்றிலிருந்தும் முரண்பட்டு இருக்கிறது..அதாவது, கோவப்படுதல், எரிச்சல் அடைதல்,
சண்டை போடுதல், புரிந்து கொள்ளாமை.அன்பு காட்டாமை,குடுத்த வாக்கை காப்பாற்றாமல் இருத்தல், சந்தேகப்படுதல், புறம் பேசுதல், சோம்பேறியாக இருத்தல்..... இப்பிடி சொல்லிக்கொண்டே போகலாம்
சோ...இப்போ எளிதாக புரியும்னு நினைக்கிறேன்..எவருடைய மனசுல நாம் நம்ம வரவுகள கூட்டிக்கொண்டிருக்கிறோமோ அந்த நபர்கள் நமக்கு மிகவும் பிடித்தவர்களாக இருக்கிறார்கள் ..மத்தவங்க நம்ம கூட சண்டை போடுபவர்களா இருக்கிறார்கள்..அதாவது... நம்ம செலவு அவுங்க....
நம்ம கணக்குல வரவு வேணுமா இல்ல....செலவு வேணுமானு நாம் தான் முடிவு எடுக்கணும் .மனங்களில் வரவுகளை அதிகரித்து, செலவுகளை குறைத்து மகிழ்ச்சியா ,ஆனந்தமா ... நாமும் வாழ்வோம்.. மற்றவர்களையும் வாழவிடுவோம்...வாழ வைப்போம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக