மழை
மழைனாலே நம்ம எல்லார்க்கும் ரொம்ப பிடிக்கும். தூசியா கிடக்கும் பூமியை, சுத்தப்படுத்தும் தூய்மையான நீர் மழை . மழைல நனையுற பாக்கியம் கிடைக்குதோ இல்லயோ ,அதை ரசிக்கவாதுசெய்வோம் .வானத்துக்கும் பூமிக்கும் ஒரு நேர்கோட்ட போட்டு இணைக்குற மழையை பாக்குறது மிக இனிமை.
இந்த மழை நமக்கு சொல்லித்தர்ற ஒரு பாடம் என்னன்னா, யார் பாராட்டுனாலும் சரி, இல்ல திட்டுனாலும் சரி.. நீ உன் வழில போய்க்கிட்டே இருங்குறது தான். சில சமயங்கள்ல மழைய நாம வா வானு யாகம் நடத்திக் கூப்பிடுவோம்.. காதுலயே வாங்கிக்காதது. நம்மள சுத்தமா மதிக்கவும் மதிக்காது. அதே நேரம், தேவையில்லாத நேரத்துல பெஞ்சு மொத்தத்துக்கும் அழிச்சுட்டுப் போயிரும்.. இந்தா, மொத்தமா வச்சு செய்யுதுல கடவுளின் தேசத்த...
எவ்வளவு நாளா மனசுக்குள்ளயே வச்சு நொந்து வேதனப்பட்டுகிட்டு இருந்துச்சோ தெரில....இப்ப வச்சு செய்யுது..அறிவியல் வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சினு மனுசன் எப்ப பேராசை பிடிச்சு ,தன்னைச் சுத்தியிருக்குற மண்,நதி,மலை,காற்றுனு எல்லாத்தையும் அழிக்க ஆரமிச்சானோ.... அப்ப இருந்தே மனசுல புழுங்கிக்கிட்டு இருந்திருக்கும் போல... மனபாரத்த இன்னமும் கொட்டித் தீத்து முடில.
இத இயற்கையின் சீற்றம்னு சொல்றதா இல்ல மனிதத் தவறுனு சொல்றதா இல்ல கடவுளின் கோவம்ங்றதா...?எதுவாக இருந்தாலும் இதுல இருக்குற பெரிய முக்கியமான விசயம் என்னன்னா சாதி மதம் இனம் மொழி மாநிலம்ங்ற வேறுபாடு இல்லாம மக்கள் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கிட்டு இருக்குறது தான். ஒருத்தருக்கொருத்தார் ஆபத்து காலத்துல உதவிக்கலனா இந்த மனுசபிறவி எடுத்ததே வீணே..அரசியல்வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மனிதம் வென்றத பாக்குறப்ப மனசுல ஒரு நம்பிக்கை விதை முளைக்குது.
எந்த மழைல நனையனும் ஆசைப்பட்டோமோ, எந்த மழையை நாம ரசிச்சோமோ .....அதே மழை இப்ப மரண பயத்தைக் காட்டிருச்சு... அங்க இருக்குறவங்களால இனிமே மழையை ரசிக்க முடியுமானு தெரில. மழைன்னாலே அய்யோ வேண்டாம்னு கையெடுத்து கும்பிடுற அளவுக்கு நிலைமை ஆகிருச்சு
.
மனிதனை விட, மனித அறிவை விட தான் உயர்ந்தவன்னு இயற்க்கை அடிக்கடி வகுப்பு எடுத்துக்கிட்டு தான் இருக்கு... ஆனா நமக்கு தான் அது புரியமாட்டேன்குது. எப்பொழுதும் இல்லாத அளவில இப்போ அடிக்கடி இயற்க்கைச் சீற்றங்கள் உலகத்தோட ஏதாவது ஒரு மூலையில நிகழ்ந்துக்கிட்டுதான் இருக்கு.
2015 ல சென்னையை கவுத்துப்போட்ட பெருமழை,2017ல அமெரிக்காவுல தன் வேலய காட்டிட்டு, இப்ப திரும்பவும் இந்தியாவுக்கே வந்துருக்கு.
மூன்றாவது உலகப்போர்னு ஒன்னு வந்தா அது தண்ணீர்க்காகத் தான் இருக்கும். தண்ணீரை சேமியுங்கள்னு உலகம் முழுவதும் விழிப்புணர்வு தோன்றியிருக்குற நிலைமைல இந்த மாதிரி அழிவுகள் நம்ம மனித இனத்தையே மொத்த மொத்தமா அழிச்சுருமோன்னு ஒரு பயம் எட்டிப்பாக்கத்தான் செய்யுது.
நம்மைக் கலங்கடிக்கும் இந்த மழை கற்றுத்தந்த பாடங்கள் நிறைய. இனியாது இயற்கையை பாதுகாத்தா அடுத்த தலைமுறைக்கு குடிப்பதற்க்கு தண்ணீர் கிடைக்கும்.. இல்லனா அவுங்க நம்மள காறிதான் துப்புவாங்க...சோ... வேற வழியே இல்ல.. நாம திருந்தி தான் ஆகணும். நாம புதுசா எதையும் உருவாக்க வேண்டாம்..பட்,இருக்குறத பத்திரமா வச்சுக்கலாமே. பேராசைகள கொஞ்சம் குறைச்சுக்கிட்டு யதார்த்தத்தை புரிஞ்சு நடந்துகிட்டா போதும்.. மரங்கள், மலைகள்,நதிகள்லாம் ரொம்ப சந்தோசப்படும். அதுங்க சந்தோசமா இருந்தா நம்மளயும் சந்தோசமா வச்சுக்குங்க...நாம வாழ்றதே சந்தோசமா இருக்கத்தானே.
உயிரோரு இருக்குறவரை வானத்தையும் அளக்குற ஆற்றல் இருக்குற நமக்கு, செத்தபிறகு தேவைப்படுறதெல்லாம் ஆறு அடி நிலமும் தூக்கிட்டுப்போக நாலு பேரும் தான்... அது இருந்தா போதுமே மனித வாழ்வு அர்த்தம் பெறுமே...நாம பிறந்த நோக்கமும் நிறைவேறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக