வெள்ளி, 7 செப்டம்பர், 2018

ஆவிக்குப் பிடித்த எண்.... 13

நேற்றைய பதிவின் தொடர்ச்சி:


          இத்ற்கு முந்தைய பதிவில் இயல் எண்களின் தனிச்சிறப்புகளை பார்த்தோம். அதனுடைய தொடர்ச்சியே இந்த கட்டுரையாகும். இயல் எண்களில் ஒவ்வொரு எண்ணிற்க்கும் ஏதாவது ஒரு சிறப்பு  இருக்கிறது. சில எண்கள் எல்லோராலும் விரும்பப்படுகிறது. சில எண்கள் ராசி இல்லாத எண்கள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகிறது.

          எண்களின் மீதான் மூட நம்பிக்கைகள் மறைந்து கொண்டு வருகிறது. இருந்தாலும் முழுவதுமாக  மறையவில்லை. அதனால் தானோ என்னவோ எட்டு மற்றும் பதிமூன்றாம் எண்கள் ராசியில்லாத எண்களென்ற கருத்து இன்னும் முழுவதுமாக மாறவில்லை.அதிலும் பதிமூன்று என்ற எண் ஆவிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் மக்கள் இன்னும் நம்புகிறார்கள்.

         பெரிய பெரிய கட்டிடங்களில் பதிமூன்றாம் எண்ணுடைய தளம் இருப்பதில்லை. மேலும் சில நாடுகளில் கதவு இலக்க எண்ணாக பதிமூன்றை அரசாங்கமே  தருவதில்லை.இந்த நூற்றாண்டில் கூட இந்த மாதிரி சில மூடநம்பிக்கைகள்   பழக்கத்திலிருப்பது  மிகவும் வருத்தத்திற்குரியது.வாகன எண்களிலும் பதிமூன்றொ அல்லது  கூட்டுத்தொகையோ வருவதை விரும்பவில்லை.
            அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட பதிமூன்றை துரதிர்ஷ்டமான எண்ணாக எண்ணுகின்றனர் .  அதனால் பதிமூன்றாம் தேதியில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவதில்லை.   பதிமூன்றாம்  தேதியோடு வெள்ளிக்கிழமையும் சேர்ந்தால் அது சாத்தானின் நாளாகவே கருதப்படுகிறது   தீய சக்தி நிறைந்த நாளாக அது கருதப்படுகிறது.
கிட்டத்தட்ட உலகம் முழுவதும் , எல்லா கலாச்சார மக்களாலும் , பதிமூன்றாம் எண்  ராசியில்லாத  எண்ணாகவும் அச்சத்தை  ஏற்படுத்தும் எண்ணாகவே இருக்கிறது .இயேசு தனது கடைசி விருந்தில் பதிமூன்றாவதாக இருந்த ஜுடாசால் காட்டி குடுக்கப்பட்டது கூட இதற்கு ஒரு காரணாமாக இருக்கலாம்.

           ஆராய்ச்சிக்காக நாசா அனுப்பிய விண்கலங்களில் அப்போலோ 13 என்ற விண்கலம் மட்டுமே தோல்வியைத் தழுவியது என்பதை யாரும் மறந்திட முடியாது.  இந்த பதிமூன்று என்ற எண்ணை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும் மக்களுடைய இந்த மூடநம்பிக்கையை,காரணமேயில்லாத அச்சத்தை அதிகரிக்கப்படுவது போலவே இருக்கிறது. இதனால் மக்களால் இந்த பதிமூன்று நிராகரிக்கப்படும் ஒரு எண்ணாகவே இன்றும் இருந்து வருகிறது.

             படித்தவர்களும் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்களும்  புகழின் உச்சியில் இருப்பவர்கள் கூட இது போன்ற மூடநம்பிக்கையிலும் அச்சத்திலும்  இருப்பது ஆச்சரியத்தையே தருகிறது.. மற்ற எண்களைப் போல் எட்டு மற்றும் பதிமூன்று ,சாதாரண எண்களே என்பதை பகுத்தறிவு கொண்டு பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.மூடநம்பிக்கை அகற்றி  ,அறிவுக்கண் திறந்து  நிகழ்வுகளை நோக்கினால் சமுதாயத்தில் இருக்கும் தேவையற்ற அச்சங்கள், பயங்கள் களையப்பட்டு சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...