திங்கள், 17 செப்டம்பர், 2018

சந்தோசம்..வாழ்க்கையின் பலம்..

  1. வாழ்வின் பலம் அறிவோம்



                      அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது... மாதவம் செய்து கிடைத்த இந்த மனிதப் பிறவியில்  நாம் சந்தோசமாக  இருக்கிறோமா?வாழ்வை வாழ்கிறோமா?அனுபவித்து ரசிக்கிறோமா இல்லை ரசித்துதான் அனுபவிக்கிறோமா?
                    இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இல்லை என்பதே பெரும்பான்மையான பதிலாகிறது .நம்மால ஏன் சந்தோசமா இருக்க முடில?என்ன செஞ்சா சந்தோசபடுவோம்? எது நடந்தா சந்தோசபடுவோம்? என்ன கிடைச்சா சந்தோசபடுவோம்? எப்பிடி இருந்தா சந்தோசபடுவோம்?....
இந்தக் கேள்விகள என்னைக்காவது நம்மள பாத்து நாம கேட்ருக்கோமா?மாட்டோம்.... ஏன்னா நமக்கு என்ன வேணும்னு  நமக்கே  இன்னும் தெரியாது...பாக்குற எல்லாம் வேணும்னு நெனக்கிறோம்....எல்ல்லாப் பொருளுக்கும் ஆச படுறோம்...மத்தவங்ககிட்ட இருந்து வித்தியாசம இருக்கனும்னு நெனக்கிறோம்...
                     ஆனா , இதயெல்லாம் அடைய முயற்சி  செய்யுறோமானு பாத்தா.....  அதுக்கும் இல்லங்குறது தான் பதிலா நம்ம பதிலா இருக்கு... நாம நெனச்சதும் அடஞ்சிரனும்....மொத தடவையிலயே ஜெயிச்சிரனும்...நெனச்சதெல்லாம் நடக்கனும்... இப்பிடி எல்லாத்துக்கும் ஆச படுற நாம அதுக்கான  முயற்சி செய்யுறோமானா ... இல்லங்குறது தான் உண்மை.
                  நம்மளால எதுலயுமே முழுமையா எதுலயும்  கவனம் செலுத்த முடியல. வீட்டுல டீவி பாத்தோம்னா ஒரு நிமிடத்துல எத்தன  சேனல்கள நாம மாத்திக்கிட்டே இருக்கோம்... அவசரம்.... எந்த எந்த சேனல்ல என்ன என்ன நடக்குதுனு  உடனே தெரியனு நமக்கு...சோ  டக்கு டக்குனு சேனல் மாத்திக்கிட்டே இருக்கோம்... நமக்கு பிடிச்ச நிகழ்ச்சியெதயும் தவற விட்டுருவோமோனு பயம்....
                ஆசபட்டு ஒரு பொருள  வாங்குறப்ப இருக்குற சந்தோசம் வாங்கி முடிச்சதும் நமக்கு இருக்க மாட்டேங்குது.. அவசரப்பட்டுட்டோமோ...இதுக்கு பதிலா அத வாங்கிருக்கலாமோனு யோசிக்குறோம்...இந்த நிறத்துக்கு பதிலா அந்த நிற புடவை எடுத்துருக்கலாமோனு நினைக்குறோம். இத வாங்குனதுக்குப் பதிலா அத வாங்கிருக்கலாமோனு திருப்தியடையாம இருக்கோம்.  ஏன் இந்த மாரி  இருக்கோம் நாம்? எதுனால நம்மளால திருப்தி அடைய முடியல... ஏன் நம்மளால இருப்பதை வைத்து, கிடைத்ததை வச்சு மகிழ்ச்சியா இருக்க முடியல?
                  இந்த தலைமுறையோட சாபம் இது... எதிலும் திருப்தியடையா மனம்...பற்றாக்குறை மனம்...இது இல்லை...அது இல்லைனு எப்பவும் துடிச்சிக்கிட்டே இருக்குற மனம்... அதுனால தான் நம்மளால அந்த நொடியில் வாழ்க்கைய வாழமுடில....அந்த விநாடிய ரசிக்க முடியல....விளைவு,  நம்ம வாழ்க்கைய நாம என்னைக்குமே வாழ்றது இல்ல.. பெரும்பாலும் அடுத்தவர்களுக்காகவே வாழுற நாம்,  நமக்காக என்னைக்கு வாழப்போறோம்? அவன் என்னைய என்ன நினைப்பான்....இவன் நெனச்சுருவானோ....அவுங்க அப்பிடி சொல்லிட்டா என்ன பண்றது?..இவுங்க ஏதும் தப்பா நெனச்சுருவாங்களோ??... இதே எண்ணங்கள் தான் நஇப்பிடி ம்மள அந்த நொடில வாழவிடாம தடுக்குது.. எப்பவும் எதிர்காலத்துலயே  நாம வாழ்றதுனால நிகழ்காலம் நம்ம கைய விட்டு நழுவுறத கவனிக்காம கோட்டை விட்டுற்றோம்...அதுக்கு அப்புறம் உக்காந்து புலம்புறோம் எனக்கு மட்டும் ஏன் இப்பிடி நடக்குதுனு...
                இதுல இருந்து எப்பிடி மீண்டு வர்றதுனு யோசிச்சு பாத்துருக்கோமா? நமக்கு கிடைச்ச  எல்லாத்தையும்  நாம் என்னைக்கு உணரப்போறோம்?..இந்த உலகத்துல எல்லாருக்கும் ஏதோ ஒன்னு கண்டிப்பா இயற்க்கை குடுத்துருக்கும்....சிலருக்கு காசு பணம் ...சிலருக்கு அறிவு....சிலருக்கு அழகு...சிலருக்கு ஆரோக்கியம்...சிலருக்கு குடும்ப உறவுகள் ...இப்பிடி ஏதோ ஒன்னு கண்டிப்பா எல்லார்க்கிட்டயும் இருக்கும்.
                    நம்மகிட்ட என்னலாம் இல்லனு லிஸ்ட் போடுற நேரத்துல என்னலாம் இருக்குனு நினச்சு பாத்தா போதும், நமக்கு கிடைத்த வரங்கள் தெரிய ஆரமிக்கும். அப்ப மகிழ்ச்சியை நோக்கி நாம நடக்க ஆரமிச்சுட்டோம்னு அர்த்தம். இது கிடச்சுருக்கு..அது கிடச்சுருக்குனு நினைக்குறப்பவே, அது  நமக்கு  கிடச்சதுக்கு நன்றி சொல்லப் பழகிட்டாப் போதும் நம்ம மனம் கொஞ்சம் கொஞ்சமா மகிழ்ச்சியடைய ஆரமிக்கும். இந்த மகிழ்ச்சியான நிலமல நாம என்ன  நினச்சாலும் அது நடக்க ஆரமிக்கும்.கேக்குறதுலாம் கிடைக்கும்...பிறகென்ன? வாழ்க்கை சந்தோசமயமாவே எப்பவும் இருக்கும்.... நாம ஆச பட்டமாரியே எல்லாம் கிடைக்கும்.
                  நாம சந்தோசமா இருந்தா ,வீடு சந்தோசமா  இருக்கும். வீடு சந்தோசமா இருந்தா ஊர் நல்லா இருக்கும்...ஊரு சந்தோசமா இருந்தா மாநிலம்  நல்லா இருக்கும்..மாநிலம் நல்லா இருந்தா நாடு  நல்லா இருந்தா.... இந்த உலகமே நல்லாருக்கும்....
சந்தோமா இருப்போம்....மானிட வாழ்வை வாழ்வோம்....மற்றவர்களையும் வாழ விடுவோம்...
எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...