என் கவிதைகள்
கல்லூரில படிக்குறப்பவே கவிதைகள் எழுதிட்டு இருந்தாலும் நான் எழுதுவேங்க்ற விசயம் எனக்கு மட்டும் தான் தெரிஞ்சிருந்தது. வெளில யார்க்கும் சொன்னது இல்ல. கேலியா எதும் சொல்லிருவாங்களோங்ற பயமும் தயக்கமும் தான் அதுக்கு காரணம் .பொதுவெளியில் என்னய எப்போதும் வெளிப்படுத்திக்கத் தயங்குவேன்.. என்ன சொல்லுவாங்களோங்ற எண்ணம் எப்பவும் என்னய ஒருவித தயக்கத்தோடவே வச்சிருந்தது.. இப்பவும் நான் அப்பிடித்தான் இருக்கேன். ஆனா இப்ப அந்த அளவுக்கு மோசமா இல்ல. வயதுக்கேற்ற ஒரு முதிர்ச்சி, மன உறுதியெல்லாம் கொஞ்சம் வந்திருக்கு.
நானே மறந்து போன எழுதும் திறனை எனக்கு ஞாபகப்படுத்துனது முகநூல். ஆரம்ப காலங்கள்ல முகநூலை நான்வெறும் பொழுது போக்குறதுக்குரிய இடமாத் தான் பாத்தேன் .ரெண்டு மூணு வருசம் கழிச்சுதான் எனக்கு நானும் ஏன் எழுதக்கூடாதுனு தோண ஆரம்ச்சது. இப்ப நாலு வருசமா நான் முகநூல்ல என் எண்ணங்களையும், உணர்வுகளையும், வலிகளையும் கவிதைகளாக எழுதிக்கிட்டு வர்றேன்.
எப்பவும் மகிழ்ச்சியாவும் ஆனந்தமாவும் வாழ நினைக்குற எனக்கு இயற்க்கை, மழை, பூனைகள், நாய்க்குட்டிகள்னா ரொம்பபிடிக்கும். கூடவே காதலும் பிடிக்கும். காதல் தான் என் பெரும்பாலான கவிதைகளுக்கு ஆதாரமா இருந்துகிட்டு இருக்கு. என்னுடைய முகநூல் கவிதைகள இங்க உங்களோட பகிர்ந்துகுறதுல எனக்கு ரொம்ப சந்தோசம்.
கூடு திரும்பும்
பறவைகள்.......
நிழலாய் பிள்ளை முகம்
பெய்து
தீர்த்திருக்க வேண்டிய
பெருமழையை
சுமந்துகொண்டேயலைகிறது
கருமேகங்கள்....
இன்று மலர்ந்த பூக்களிடம்
பேசிக்கொண்டிருக்கிறேன்...
தோள்தட்டி கோபம்
சொல்கிறது
வண்ணத்துப்பூச்சி...
என் வியர்வை அருந்தி
தாகம் தீர்க்கிறது
தகித்து களைத்த கதிரவன்....
நடையாய் நடக்கிறது
மனம்
உனக்கும் எனக்குமிடையில்..
அடம் பிடிக்கும்
குளிரை அனுப்பிவிட்டு
கண் கலங்கும்
கருமேகங்கள்...
முத்தமிட்டே
கடக்கிறது காற்று….
தலைகாலறியாது ஆடும் பூக்கள்…
உன் பிடிக்குள் இறுகும்
என் விரல்கள்...
சிவந்து போனது இதயம்...
நீர் முத்துக்கள்
பூமி தொடும் அழகை
ரசிக்க முடியவில்லை
பிள்ளைகள் வீடு வரும் வரை...
எப்படி இருக்குறதுன் நண்பர்களே? ....இது போல நிறைய நிறைய என்னுடைய முகநூல் பக்கத்துல இருக்கு...விரும்புறவங்க மேகலா கருணையானந்தம்ங்ற என் சுவற்றில் பார்த்துக்கங்க..
என் எண்ணங்களை வெளிப்படுத்த எனக்குக் கிடைத்த ஒரு வரம் என் எழுத்து... சின்னச் சின்ன வரிகளில் எண்ணங்களையும் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்த கிடைத்த நல்ல தளமா முகநூல் இருக்கு .இந்தக் கவிதைகள படிச்சுட்டு அது பற்றிய உங்கள் கருத்துக்களை இங்க பகிர்ந்துகொள்ளுங்கள்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக