மத்தவங்க மகிழ்ச்சியா இருக்கறதப் பாத்து நம்ம மனசு ஒரு மாதிரி தவிக்குதா? என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்பிடி இருக்கு?
எனக்கு மட்டும் சாண் ஏறுனா முழம் சறுக்குதே..அவன்லாம் நல்லா இருக்கானே....என்னால மட்டும் ஏன் அப்பிடி இருக்க முடில?
இது மாரி எவ்வளவோ கேள்விகள் நம் மனசுல அப்பப்ப வந்துகிட்டு தான் இருக்கு...நமக்கு மட்டுமில்ல எல்லார் மனசுலயும் வர்ற கேள்விகள் தான் இதெல்லாம்...இந்தக் கேள்விகளுக்கு என்னைக்காது நாம பதில் தேடிருக்கோமானு பாத்தா.... பெரும்பாலான பதில்கள் இல்லங்குறது தான். கேள்விகள் மட்டுமே கேட்டுகிட்டு
இருந்தா வாழ்க்கை மாறிருமானு நாம் யோசிக்குறதில்ல. எதுனால நாம வருத்தப்படுற மாரி நிகழ்வுகள் நமக்கு நடக்குது...எந்த இடத்துல தவறுகிறோம்...எப்பிடி அத சரி பண்றதுனு நாம யோசிச்சி பாத்தா வேர்
எங்கனு ஈசியா கண்டுபிடிச்சுரலாம்...
நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பழமொழி 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்'.. இதோட உள்கருத்து என்னன்னு நாம சிந்திச்சு கூட பாத்ததில்ல.. 'ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் வினை உண்டு'னு ஐசக் நியுட்டன் சொல்லிருக்கதும் அறிவியல்ல ஆர்வமிருக்குற எல்லாருக்கும் தெரியும். 'கொடுங்கள் அப்போது உங்களுக்கும் கொடுக்கப்படும்'னு ஏசு சொல்லிருக்கிறார்னு பைபிளும்
சொல்லுது...
இதெல்லாத்துக்கும் அடிப்படை என்னனு பாத்தா....நாம்
என்ன நெனைக்குறொமோ அது தான் நடக்கும்…நாம என்ன செய்யுறோமோ அதே தான் நமக்கும் நடக்கும்ங்குறது தான். மறைமுகமா இதத்தான் எல்லாரும் சொல்லிருக்காங்க.. நாம செய்யுறது தான் நமக்கு திரும்பக் கிடைக்கும்னா நாம ஏன் நல்லது மட்டுமே செய்யக்கூடாது? நல்லத மட்டுமே நினைக்கக்கூடாது? இப்பிடி என்னிக்காது யோசிச்சிருக்கோமா?
நம்மளோட வார்த்தைக்களுக்கு அதிகப்படியான சக்தி இருக்கு…அதுனால
தான் அந்தக் காலத்துல நல்ல வார்த்தைகள் மட்டும் பேசுனாங்க..சினிமாக்கள்லயும் கூட நல்ல
விசயங்களும் நல்ல வார்த்தைகளுமே பேசினாங்க…ஆனா
இன்னைக்கு? தொலைக்காட்சியும் சரி… சினிமாக்களும் சரி நல்ல விச்யங்கள விட தவறான்
விசயங்களையும் தவறான வார்த்தைகளையும் சமூகத்துக்கு குடுத்துக்கிட்டு இருக்காங்க..சிறு
சிறு குழந்தைகள் கூட இதனால எளிதாக சரியான் பாதைல இருந்து விலகிடுறாங்க…. விளைவு…சமூகக்
கேடுகள்..
நல்ல விசயங்கள பேசுறப்ப நல்ல
விசயங்கள் கேக்குறப்ப நம்ம மனம் அமைதியா இருக்கும். அமைதியான மனசால தான் நல்ல திறம்பட
செயல்பட முடியும். அதோட பலனும் அதிகமா இருக்கும். நல்லது செஞ்சா திரும்ப நமக்கு நல்லது தான் நடக்கும்... நல்லது நெனச்சாலும் நல்லது நடக்கும். அன்பக் குடுத்தா அன்பு தான் திரும்பக் கிடைக்கும்...புன்னகையக் குடுத்தா புன்னகை தான் திரும்பக் கிடைக்கும்...இப்பிடி எல்லாமே நம்ம கைல இருக்குறப்ப நாம எதுக்குவீணா பொலம்பணும். நம்ம விருப்பப்படி வாழ்க்கையை அமைச்சுக்கலாமே..
அது நமக்கு ஏன் தெரில...?
ஒவ்வொரு தடவயும் நாம வருத்தப்பட்டு பொலம்ப பொலம்ப,
சோகமான எண்ணங்களையும், சோக உணர்வுகளையுமே வெளிப்படுத்திக்கிட்டு இருக்குறோம்ங்க்றத மறந்துற்றோம்.. அதன் விளைவு தான் எல்லாமே நமக்கு எதிராவே நடக்குறது...
நம் ஆசைகள கனவுகள அடைய எளிய வழி அன்பா இருக்குறதும் நல்லத நெனைக்குறதும் நல்லத செய்யுறதும் தான்.. இந்த ரெண்டு நிலையிலயும் வார்த்தைகள்
நாம் பயன்படுத்துற வார்த்தைகள் முக்கியம்.
வார்த்தைகள் நம்ம மனநெலயை காட்டுற கண்ணாடி. அன்பான வார்த்தைகள பேசுறப்ப மத்தவங்களுக்கும்
நம்மகிட்ட அன்பா இருக்குறது,
அன்பா பேசுறத தவிர வேற வழியே இல்ல. நம்ம உலகம் அன்பா இருக்குறப்ப அன்பு நிறைந்த நிகழ்வுகளை நாம ஈர்த்துக்கொண்டே
இருக்கிறோம்..அதுனால நாம மகிழ்ச்சியா இருப்போம்.. எந்த உணர்வுகளை வெளிப்படுத்துறோமோ அதே உணர்வுகளைத்தான் ஈர்க்கிறோம்.அதுனால நம்ம வார்த்தைகளும் உணர்வுகளுமே நாம ஆச படுற வாழ்க்கைய வாழத் தேவையான அஸ்திவாரக்கற்கள்...இந்தக் கற்கள் மேல கட்டுற வாழ்க்கை மிகச்சிறப்பா இருக்கும்.
காய் கவர்ந்தற்றுங்ற வள்ளுவர் வாக்கு மனசுல நல்லா பதிய வச்சுக்கிட்டா போதும்.. நம் வாழ்வின் போக்கை நம்ம விருப்பத்திற்க்கு ஏத்த மாரி நம்மளால உருவாக்கிக்க முடியும்..
தீதும் நன்றும் பிறர் தர வாரா...
நம் வாழ்க்கையை நாம் உருவாக்குவோம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக