ஞாயிறு, 15 ஜூலை, 2018

நம்பிக்கை....

  மனதில் எழும் எண்ணங்களின் தீவிரத் தன்மையே நம்பிக்கையாகும்.. போட்டிகள் நிறைந்த இந்த காலகட்டத்தில் நம்  வாழ்வை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு அழைத்துப் போகிற
பொறுப்பாளர் . எந்த ஒரு பொருளின் மீதோ இல்லை நபரின் மீதோ நமக்கு ஏற்படுகிற தீவிரமான எண்ணமே நம்பிக்கையாகிறது. சிலருக்கு தன்னை விட மற்றவர்கள் மீது அளவு கடந்த நம்பிக்கை உண்டு. உதாரணமா கடவுள் மீதான ஒரு நம்பிக்கைய சொல்லலாம்..கோயிலுக்கு போய் சாமி காதுல சொல்லிட்டா போதும் கேட்டது நடந்துரும்னு நம்புறவங்க அதுல நம்மளோட சுய முயற்சி என்னனு நினைச்சுப் பார்க்க மறந்து போயிடுறாங்க..  எந்தவித நம்பிக்கையா இருந்தாலும் சரி அது ஒரு தீவிர நம்பிக்கையோ இல்ல சும்மா தோன்றும் நம்பிக்கையோ இல்ல குருட்டு நம்பிக்கையோ எதுவா இருந்தாலும் சரி அதுல நம்மளோட முயற்சியும் இல்லைனா நிறைவேறுவது சந்தேகமே .சோ நம்பிக்கையோட முயற்சியும்  இருக்கனும்..

எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்திருக்கும் குழந்தை போல் நாமும் இருக்க வேண்டும்.தவறுகளிலிருந்து கற்கும் பாடங்கள் தான் நம்மை சீர்படுத்தி நல் வழிபடுத்தும்...மனஉறுதியும் அதிகரிக்கும்...தோல்விகள் நம்மை செதுக்கவே என்பதை உணர்ந்து கொண்டால் போதும்..நாம் முன்னேற்றப்பாதையில் நடக்கத் தொடங்கிவிடுவோம்..

வீழ்வது எழுவதற்கே என்ற புரிதல் இருந்தால் நம் வாழ்வு நாம் விரும்பும் வகையில் அமையும் .  வீழ்ச்சி கண்டு சோர்ந்திடாது, தொடந்து நடப்போம்...
நம் மீது நம்பிக்கை வைப்போம்... நம் உழைப்பை நம்புவோம்....வெற்றி நமதே...
                 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...