திங்கள், 16 ஜூலை, 2018

சுயபிரகடனம்

சுயபிரகடனங்கள்


இந்த வார்த்தை நமக்கு புதுசா இருக்கலாம். ஆனா தெரிந்தோ தெரியாமலோ
நாம அடிக்கடி செய்யும் ஒரு செயல் தான் இது..சுயபிரகடனம் ...ஆங்கிலத்துல இத ஆட்டோ சஜஷன் என்று சொல்வாங்க..இப்போ உங்களுக்கு புரிஞ்சமாதிரி இருக்குல...

நண்பன் படத்துல நடிகர் விஜய் அடிக்கடி சொல்வாரே...ஆல் இஸ் வெல்...அது ஒரு சுயபிரகடனம் தான்..இப்போ நல்லா புரிஞ்சுருச்சுருக்கும் சுயபிரகடனம்னா என்னவென்று... அதாவது நமக்கு நாமே உற்சாக வார்த்தைகளை சொல்லிக் கொள்வது.. நமக்கு நாமே நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை சொல்வது....நம்ம  வீட்டுல பெரியவங்க எல்லாம் நன்மைக்கேனு  சொல்லி கேட்டிருப்போம்... அதுவும் ஒரு சுயபிரகடனம் தான்.. 

 மனசு தளர்வா இருக்குற சமயத்துல இந்த  மாதிரியான சுயபிரகடனங்கள் நமக்கு மிகவும் உதவியா இருக்கும்.. சோர்ந்துவிடாம உற்சாகத்தோடு நம்மை செயல்பட வைக்கும்..  இந்த சுயபிரகடனங்களை எவ்வளவுக்கு எவ்வளவு உபயோகிக்கிறோமோ அவ்வளவு நமக்கு நல்லதே நடக்கும்...

இந்த மாதிரி சுயபிரகடங்களைச் சொல்லிக்கொள்வதால் நம்மால் மனத்தடைகளை எளிதில்  தாண்டிச் செல்ல முடிகிறது. . நம் செயல்களை சிறப்பாகவும்  செய்ய முடிகிறது...நம் முன்னேற்றப் பாதையில் நாம் தொடர்ந்து செல்ல இந்த மாதிரி சில செயல்களை செய்தால் போதும்....மனதின் பாரங்கள் குறைந்து லேசாகும்...நம்மால் கொண்டாட முடியும்...வாழ்க்கை ஆனந்தமயமாகும்...
இன்றே இதை செய்யத் தொடங்குவோம்...

சில சுயபிரகடனங்கள் இங்கே ...முயன்று பார்க்கலாமே நாம்..

என்னால் முடியும்...
நான் வெற்றி பெறுவேன்...
நான் தைரியமாக இருக்கிறேன்...
நான் சரியான முடிவுகளை எடுப்பதில் சிறந்தவன்/சிறந்தவள்...
நான் வாழ்க்கையில்முன்னேற்றத்தை நோக்கி போய் கொண்டு இருக்கிறேன்..
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்...
என் திறமைகளை நான் முழுமையாக வெளிப்படுத்துகிறேன்...
என் குறிக்கோள்கள்களை நான் எளிதில் அடைகிறேன்...


இவை சில உதாரணங்களே....உங்களுக்கு தேவையான் சுயபிரகடனங்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்...நேர்மறையாகவே இருக்கட்டும் உங்கள் சிந்தனைகள்...இவற்றை பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்...


வாழ்க வளமுடன்....


.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...