செவ்வாய், 17 ஜூலை, 2018

வாழ்க்கையைக் கொண்டாடுவோம்

மானிடப்பிறப்பு அரிது


அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது... மானிடப் பிறப்பு  உயர்ந்த பிறப்பு..
பிறந்தோம்...மடிந்தோம்..என்று முடிந்து விடுகிறது நம்மில் பெரும்பாலானோர் வாழ்க்கை... இதற்குத்தான் இந்த அரிய பிறப்பா...?

வாழ்க்கையை நாம் வாழ்கிறோமா என்று பார்த்தால் இல்லை என்பதே நமது பதிலாக இருக்கிறது..வாழ்க்கையை நாம் வாழ்வதில்லை.. மாறாக, கடத்துகிறோம்...கண் விழித்தது முதல் கண் உறங்கும் வரையான நமது நாளானது பொழுதை கடத்துவதாகவே  இருக்கிறது...இதனாலயே எளிதில் சலிப்படைகிறோம்... எதிலும் மனநிறைவு வருவதில்லை.. அடுத்து,அடுத்து என்று எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம்... எதிலும் திருப்தி அடையமுடிவதில்லை  நம்மால்..

எதனால் இந்த நிறைவற்றதன்மை?.. எதை நாம் தேடுகிறோம்? என்ன வேண்டுகிறோம் நாம்? என்ன எதிர் பார்க்கிறோம்?.. பதிலே இல்லாத கேள்விகள்...

ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையோடு கடக்கும் அதே நேரத்தில், நாம் நடக்கும் பாதையில் பூத்திருக்கும் ஒரு பூவை ஏன் ரசிக்கமுடிவதில்லை?
என்றைக்காவது  சிந்தித்திருப்போமா ஏன் என்று..?.. பொருளாதாரத் தேடல் நம்முடைய ரசனை என்னும் உண்ர்வை நம் பார்வையிலிருந்து  மறைத்துவிட்டதே காரணம்...பொருளாதார நிறைவு தரும் அதே உணர்வை நம் குழந்தையின் ஒரு மென் முத்தம் தரும் ...மணம் வீசும் மலர்த்தோட்டத்தை காணும் போது ஏற்படும் மகிழ்ச்சியும் நாம் விரும்பிய ஒரு  விலையுயர்ந்த பொருளை வாங்கும் போதும் ஏற்படும் மகிழ்ச்சியும் ஒன்றே...

யாருடைய வாழ்விலும் நூற்றுக்கு நூறு சதவீதம் கஷ்டங்களே ஏற்படுவதில்லை.. எவ்வளவு கடினமான பாதையாகிலும் கண்டிப்பாக சிறு சிறு சந்தோசமான நிகழ்ச்சிகள் நடந்தேயிருக்கும்.... அவற்றை நாம் உணர்ந்து மகிழ்ந்தால் போதும்...ரசனைகளை உயிர்பித்துக் கொண்டாலேபோதும்...அளவில்லா ஆனந்தங்கள் நம்மை வந்தடையும்..
சின்னச் சின்ன சந்தோசங்களூக்கு நாம் முன்னுரிமை கொடுத்தாலே 
நம் வாழ்க்கையின் போக்கு மாறிவிடும்...

நமக்குப் பிடித்த பாடல்,நமக்குப் பிடித்த உணவு, நமக்குப் பிடித்த  வண்ணம்,நமக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ,நமக்குப் பிடித்த இடம், என்று எவ்வளவோ இருக்கிறது ரசித்து மகிழ்ந்திட... இவற்றையெல்லாம்  உணர்ந்தாலே ,நம்மால் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ முடியும். அடுத்த விநாடியில் என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் இந்த நொடியை சிறப்பாக  வாழ நாம் ஏன் முயலக்கூடாது?இரவலாகக் கிடைத்த வாழ்க்கையை நிறைந்த மனதோடு ஆனந்தமாய் கொண்டாடுவோம்..

முயன்றால் முடியாதது என்று எதுவுமில்லை.. ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியோடு,  மகிழ்ச்சி அலைகளைப்  பரப்புவோம்... நம் மகிழ்ச்சி மற்றவர்களையும் தொற்றிக்கொள்ளட்டும்....இந்த உலகம் மகிழ்ச்சியால் நிறையட்டும்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...