பயணங்கள்
நம்மில் பெரும்பாலோர்க்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கு. சும்மா ஒரு ரவுண்ட் என்றே தானிருக்கும் ஊரையே சுற்றி வருபவர்களும் உண்டு..இவர்களால் சிறிது நேரம் கூட வீட்ல் இருக்கமுடியாது.. சிறைச்சாலையில் இருப்பது போலவே தவிப்பர்... விடுமுறையிலோ ,பள்ளி , கல்லூரி விடுமுறையிலோ பயணம் செய்பவர்கள் அதிகம்.அதிலும் மலைப்பிரதேசங்களுக்கு பயணம் என்றால் போதும்.. நாம் எப்போதுமே தயாராகவே இருக்கிறோம்.
குடும்பத்தோடு சுற்றுலா, நண்பர்களோடு, கல்விச்சுற்றுலா, அலுவலகச் சுற்றுலா என்று நம்மோடு பின்னிப் பிணைந்திருக்கிறது இந்தப் பயணம்...
அலுத்து சலித்த மனதிற்கு பயணங்கள் புத்துயிர் ஊட்டி மீண்டும் ஒரு சம நிலைக்கு கொண்டு வருகிறது..
இந்தப் பயணங்களில் நாம் சந்திக்கும் புதுப்புது மனிதர்கள், புது இடங்கள், புதுப்புது அனுபவங்களுக்கு இணை எதுவுமில்லை...இந்த அனுபவங்கள் நம்மை மேலும் மேலும் பண்படுத்தி, மீண்டும் இந்த உலகத்திற்கு அனுப்புகிறது.
பயணங்களில் நம்மையும் அறியாது நமது மனம் மகிழ்ச்சித் தளத்திற்கு போய்விடுகிறது..இதனால் தான்,எவ்வளவு வயதானவர்கள் கூட சுற்றுலாக்களில் சிறுபிள்ளையாய் மாறிவிடுகிறார்கள்... அவர்களின் ஆழ்மனம் தூண்டப்பட்டு,பதிந்திருக்கும் பழைய நினைவுகளின் ஆனந்தங்களை மீண்டும் புதுப்பிக்கிறார்கள்...அளவற்ற மகிழ்ச்சியில் தங்களையே மறந்தும் போகிறார்கள்..பெரியவர்களுக்கே இப்படி என்றால் மற்றவர்களைக் கேட்கவா வேண்டும்..
Add caption |
குழந்தைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்...பயணதினத்திற்குப் பல நாட்கள் முன்பே மனதளவில் தயாராகிவிடுகிறார்கள்.... அவர்களூக்கு வேண்டிய பொருள்களை எடுத்து வைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்...
அளவற்ற மகிழ்ச்சிக்குத் தங்களை தகுதியுடையவர்களாக்கிக் கொள்கிறார்கள்..
மலைப்பிரதேசப் பயணங்கள் நம்மை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கிறது... நாம் உடல் அளவிலேயே வீடு திரும்பிகிறோம் மனதை அங்கயே விட்டுவிட்டு வருகிறோம்...நினைவுகளில் நாம் விரும்பும் நேரமெல்லாம் அந்த சந்தோச நாட்களுக்கு நாம் போய் போய் வருகிறோம்.
ஒவ்வொரு பயணமும் நம்மை சீர்படுத்துகிறது..மேம்படுத்துகிறது. நம்முடைய வருமானத்தில் ஒரு சிறு பகுதியை நாம் இதற்கென ஒதுக்கி வந்தால் போதும்..நம்மால் ஆண்டுக்கொடு முறையாது நாம் விரும்பிய இடங்களை சுற்றி வரமுடியும்...என் மலைப்பிரதேசச் சுற்றுலாக்களீன் சில புகைப்படங்கள் சில....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக