உப்பு---கடத்தப்பட்ட வரலாறு
உப்பு விளையும் களத்திற்கு உப்பளம் என்று பெயர். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழி நாம் அறிந்ததே..நாமெல்லாம் சாதாரணமாக இன்று நினைக்கும் உப்பு ஒரு காலத்தில் மதிப்பு மிக்க ஒரு பொருளாக இருந்திருக்கிறது . உப்புப் பெறாத விசயம் என்று நம்மால் மிக எளிதாகக் கருதப்படும் உப்பு அந்தக் காலத்தில் ஒரு பெரிய போராட்டத்திற்கே காரணமாக இருந்திருக்கிறது. காந்தியின் தண்டி யாத்திரை உப்பிற்காக நடத்தப்பட்ட ஒன்றே.
உப்பின் பழமை
சத்திரகுப்தர் காலத்திலேயே உப்பிற்க்கு வரி விதிக்கப்பட்டுள்ளது..அர்த்தசாஸ்த்திரத்தில் உப்பிற்க்கு தனி வரி விதிக்கப்படவேண்டும் .. அதற்க்கென தனி அதிகாரி நியமிக்கப்படவேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார் .இதிலிருந்தே உப்பின் மகிமையை நாம் அறிந்துகொள்ளலாம்.மொகலாயர்கள் ஆட்சியிலும் உப்பின் மீது வரி விதிக்கப்பட்டிருந்திருக்கிறது.. ஆனால் அது மிக சொற்பமான அளவிலேயே வரிவிதிப்பு
இருந்திருக்கிறது .சோழர்கள் காலத்தில் நெல்லின் விலைக்கு சமமாக உப்பின் விலை இருந்திருக்கிறது. பெரிய பெரிய உப்பளங்களுக்கு மன்னர்களின் பட்டப்பெயர்கள் சூட்டியிருந்திருக்கின்றனர். உதாரணமாக பேரளம் , கோவளம் .சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் உப்பு வணிகம் அரசர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்திருக்கிறது.
ஆங்கிலேய அரசின் சுரண்டல்கள்
அன்றும் சரி, இன்றும் சரி உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது குஜராத் மாநிலம் தான். இங்கு பாரம்பரியமாக உப்பு விளைவிக்கப்படுகிறது .இங்கு இருந்து தான் வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.ஆங்கிலேய அரசு இந்த உப்பு வணிகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்பி அநேக நிபந்தனைகளை இட்டனர்.. அரசிடம் மட்டும் தான் உப்பு விற்கப்பட வேண்டும் என்று நிபந்தனை போட்டனர். உப்பளங்களைக் கண்காணிக்க சால்ட் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டனர்..ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதைத் தடுத்தனர்.ஆங்கிலேயர்களின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து பலர் உப்பை கடத்தி விற்றனர்.. அவர்களின் மீது கடுமையான குற்றங்கள் சாட்டப்பட்டன.
முள்வேலி
உப்புத் தொழிலை தங்கள் கட்டுப்பாட்டுன் கீழ் கொண்டுவர விரும்பிய ஆங்கிலேயர்கள் ,ஒரிசாவிலிருந்து இமயமலையின் நேபாள் எல்லைவரை ஒரு முள்வேலி அமைக்கத் திட்டமிட்டனர்.அதற்க்கான வேலைகளும் துரிதமாக தொடங்கபட்டன..ஒரு மைலுக்கு ஒரு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. இங்கு வேலை பார்ப்பவர்களுக்கு அதிக அளவு சம்பளமாக ரூபாய் 5 கொடுத்து வந்தனர்.. இது ஒரு விவசாயியின் ஆறுமாத வருவாயைவிட அதிகம்..
இந்த தடுப்புவேலிகள் இந்தியாவை இரண்டாகப் பிரித்தது. சக்கரை, தானியங்கள்,எண்ணெய் , உப்பு என எந்த பொருள்களும் அரசின் கண்களில் இருந்து தப்பவில்லை கடுமையான இந்த வளையத்தையும் தாண்டி பஞ்ஞாரா இனமக்கள் உப்பைக் கடத்தத் தொடங்கினார்கள்..அதிகார துஷ்பிரயோகமும் வன்முறைகளூம் ஆங்காங்கே தலை தூக்கத் தொடங்கின. கடத்தல்காரர்களுடன் நடந்த சண்டையில் நூற்றுக்கணக்கான காவலர்கள் கொல்லப்பட்டனர் .காவலர்களின் வேலைப்பளு அதிகரித்துகொண்டே போனது. ஞாயிறன்று கூட விடுமுறை மறுக்கப்பட்டது.இரண்டு பகல் ஒரு இரவு தொடர்ந்து பணி செய்யப் பணிக்கப்பட்டனர்
கையூட்டு
உப்பின் மூலம் அரசாங்கத்துக்குக் கிடைத்த வருமானம் அதிகரித்துக்கொண்டே போனது.இதனால் சோதனைச்சாவடி ஊழியர்கள் கையூட்டு பெற்று குறைந்த விலைக்கு தாங்களாகவே விற்கத் தொடங்கியதுடன், கையூட்டை ஒரு வழக்கமாகவே கொண்டுவந்தனர் .இதனால் முள்வேலியின் இறுக்கம் குறையத்தொடங்கியதஆட்குறைப்பு
பராமரிப்பு செலவுகள் கூடிக்கொண்டே போனதால் கிட்டத்தட்ட 4000 ஊழியர்கள் விடுவிக்கப்பட்டனர்.அதன் பிறகு வந்த நார்த் புரூக் பிரபு உப்பின் மீதான் வரியை ரத்து செய்யலாம் என்று முன்மொழிந்தார்.. ஆனாலும் வருமானத்தை இழக்க ஆங்கிலேய அரசு விரும்பவில்லை.
உப்புவரியால் வணிகர்களும் பொதுமக்களும் அதிகமாக துன்பப்பட்டனர் .அரசோ அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவேயில்லை.. தங்கள் வருமானத்தை அதிகரிப்பதிலேயே கவனமாக இருந்தனர்.
காந்தியின் அறப்போராட்டம்
1930ல் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்பிற்க்கு ஆங்கிலேய அரசு மீண்டும் வரி விதித்தது. அரசாங்கத்திடமே உப்பை விற்கவேண்டுமென்று உப்பு காச்சுபவர்களை ஒடுக்கியது.இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தியடிகள் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. எளிய மக்களின் ஆதாரமான உப்பின் மீதான இந்த பிரச்சனையை சத்தியாகிரக முறையில் தீர்க்கவிரும்பிய காந்தி தண்டி நோக்கி தனது 240 மைல் நடைப்பயணத்தைத் துவக்கினார் .அப்போது அவருக்கு வயது என்ன தெரியுமா? 61...
அவருடைய இந்த அறப்போராட்டம் இந்தியா முழுவதும் பரவியது.வெள்ளையர் ஆட்சிக்கு விடப்பட்ட ஒரு எச்சரிக்கை மணி அது. உப்பின் பெயரால் ஏமாற்றப்பட்டுவந்த எளிய மக்களின் எழுச்சி. ஆங்கிலேய அரசு உப்பின் மீதான வரியை ரத்து செய்தது..
மக்களின் வாழ்வாதாரமான உப்பின் மீதான அதிகப்படியான சுரண்டலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் காந்தியடிகள்..
தகவல் உதவி:
எஸ் ரா வின் எனது இந்தியா..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக