மொழி-நம் அடையாளம்
நமது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்த, நம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள,நம் சிந்தனைகளை பகிர்ந்துகொள்ள , நம் தேவைகளை மற்றவர்களுக்கு உணர்த்த, நமக்கு வேண்டியதை பெற்றுக்கொள்ள நமக்கு மிகவும் உதவியாக இருப்பது மொழி.
மொழிகள் இல்லை என்றால் நமது நிலைமை என்னவாக இருந்திருக்கும்..?
நினைத்துப் பார்க்கவே இயலவில்லையல்லவா...மொழிகள் இல்லையென்றால் நாம் இல்லை. மனிதன் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கமுடியாது...எண்ணங்களை சரியான முறையில் ,சரியான அளவில் வெளிப்படுத்த நமக்கு மொழிகள் மிகவும் உதவியாக இருக்கின்றன.
ஒவ்வொரு மொழியிலும் லட்சக்கணக்கான சொற்கள் இருக்கின்றன.அதில் உபயோகத்தில் இருக்கும் சொற்கள் என்று பார்த்தால் சில ஆயிரக்கணக்கான சொற்களே.. அதிலும் குறிப்பிட்ட சில சொற்களையே நாம் அதிகம் உபயோகப்படுத்துகிறோம். .நாம் பயன்படுத்தும் சொற்களிலும் பிறமொழிக் கலப்பில்லாத சொற்கள் மிக மிகக் குறைவே..
நம் தாய்மொழியான தமிழில் பெரும்பாலும் வடமொழிச்சொற்களும் ஆங்கில மொழிச்சொற்களும் கலந்திருக்கின்றன.. ஒரு புதுவகையான மொழியை நாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம் நம் மொழி செம்மொழி என்பதை மறந்துவிட்டோம்.. எந்த மொழியோடும் கலக்காது தனித்து நின்று செயல் படக்கூடிய வல்லமை வாய்ந்தது நம் தமிழ் மொழி என்பதை மறந்து , பிறமொழிச் சொற்கள் கலந்து பயன்படுத்துகிறோம்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றி மூத்தகுடி நம் மொழி என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டிய சரியான நேரம் இது.. நம் மொழியில் இல்லாத சொற்களே இல்லை.வரும் தலைமுறைக்கு நாம் என்ன விட்டுப்போகிறோம்? சிதைந்து போன மொழியையா?
இல்லை சீர் மிகு மொழியையா..? சிந்திக்க வேண்டிய தருணமிது...
சற்றே முயன்றால்.நம்மால் மறக்கப்பட்ட சொற்களை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வரமுடியும்..ஆங்கிலம் கற்க காட்டும் அக்கறையை நாம் ஒவ்வொருவரும் நம் தாய்மொழியைம் கற்க காட்டினால் நம் மொழி எழுச்சிபெறும்.
தமிழில் நிறைய நூல்களை வாசிக்கத் தொடங்குவோம்...அதனால் பழைய ,மறந்து போன நூல்கள் மீண்டும் புத்துயிர் பெறும்....இதனால் மக்களிடையே
மொழிவளம் பெருகும்...மொழி செழித்தால் இனம் செழிக்கும்... இனம் செழித்தால் நாடு செழிக்கும்... நாடு செழித்தால் உலகம் உய்யும்.
மொழிகளின் களஞ்சியம்:
நம் இந்தியாவில் மொத்தம் 3,372 மொழிகள் பேசப்பட்டுவருகிறது... இதில் 18 மொழிகளே அதிகாரபூர்வ அரசு மொழிகளாகும்..மற்ற மொழிகள் அனைத்தும் பேச்சு வழக்கில் மட்டுமே இருக்கின்றன. பெரும்பான்மையான மொழிகளுக்கு எழுத்து வடிவமே இல்லை. ஒரு காலத்தில் கோலோச்சிய மொழிகளில் பல இன்று இல்லை.அதற்கு முக்கிய காரணம் அவை எழுத்து வடிவம் பெறாததே. எடுத்துக்காட்டாக அந்தமான் நிக்கோபாரில் பேசப்பட்டுவந்த
போ மொழி ,கேரளாவில் கொச்சிப் பகுதியில் பேசப்பட்டுவந்த க்ரியோல் மொழி..கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 5 மொழிகள் அழிந்துவிட்டன. கிட்டத்தட்ட 42 மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன.
ஒரு மொழியை அழிய விடாமல் காப்பது நமது கடமையாகும்..
அழியக்கூடிய நிலையிலிருக்கக்கூடிய மொழிகளின் பயன்பாட்டை அதிகரிக்கவேண்டும். அம்மொழிகளைக் கற்க ஆர்வம் காட்டவேண்டும். பேச்சுமொழியில் அவற்றின்செயல்பாடு அதிகரிக்க வேண்டும். எழுத்துவடிவில் நிறைய புத்தகங்கள் வரவேண்டும்..அம்மொழிகளை பள்ளிகளில் பாடமாக வைக்கவேண்டும்..இந்த வகை நடவடிக்கைகளால் மொழிகள் அழிவதை தடுக்கமுடியும்.இனங்கள் அழிவதையும் தடுக்கமுடியும்..
நம் வளர்ச்சிக்குக் காரணமான ,நம் இனம் காக்கும் மொழிகளை அழியவிடாது காக்க நாம் எல்லோரும் ஒரு அடி முன் வைத்தாலே போதும்..நம்மைப் பார்த்து மற்றவர்களும் ஒரு அடி எடுத்து வைப்பார்கள்.ஒரு அடி இரண்டு அடி ஆகும்..இரண்டு நான்காகும்.. நான்கு எட்டாகும்..அப்படியே பல்கிப்பெருகும்..இது ஒரு கூட்டு முயற்சியால்தான் சாத்தியமாகும்..முதல் அடியாக நம் மொழியில் பேசுவோம்...நம் குழந்தைகளுக்கு நம் மொழியை கற்பிப்போம்...
.

. நம் மொழி...நம் உரிமை
நம் இனம் காப்போம்...
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக