புதன், 25 ஜூலை, 2018

ice cream- பனிக்கூழ்

பனிக்கட்டி  ...ஃப்ரெடெரிக் டூடர்

பனிக்கூழ் ,அதாவது ஐஸ்கீரிம் விரும்பாத மனிதர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு கண்டிப்பாக உடல் நலக்குறைவு இருக்கும். அவர்கள் தவிர்த்த மற்ற எல்லோருக்கு ம் இந்த ஐஸ்கீரிம் மீது தீராக் காதல்  இருக்கிறது...ஒரு காலத்தில் டாக்டர் சர்டிபிகேட் இருந்தால் மட்டுமே சாதாரணனுக்குக்  கிடைத்துவந்த, ஆடம்பரப் பொருளாக இருந்த ஐஸ்கீரிம் தான் இன்று எல்லோரும் விரும்பும் பொருளாக மாறியிருக்கிறது

இன்று   பல நிறங்களிலும் பல சுவைகளிலும்  எளிதில்   கிடைக்கும் ஐஸ்கீரிம், குடும்ப விழாக்களிலும் திருமணங்களிலும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது  குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பப்படும் இந்த ,ஐஸ்கீரிம் தன் சுவையால் எல்லோரையும் மயக்கிவைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

த ன் குளிர்ச்சி மற்றும் சுவையால் நம்மை கட்டிப் போட்ட ஐஸ்கீரிம் அதிக கலோரி கொண்ட ஒரு உணவாகும்..பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்களாலேயே அதிகம் விரும்பப்படுகிறது.   எல்லோரையும் ஆட்டுவிக்கும்
இந்த ஐஸ்கீரிம் நமக்கு எப்படி  எப்படி கிடைத்து?  கரையாத கதை ஒன்றுண்டு ஐஸ்கீரிமிற்க்கு..

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் இயற்க்கையாக உருவாகும் பனிக்கட்டிகளை வெட்டி இந்தியாவிற்க்கு முதன் முதலில் 1833ல் அனுப்பியவர் ஃபிரெட்ரிக் டூடர். குளிர்காலத்தில் உறைந்து  போகும் ஆறுகளிலும் ஏரிகளிலும்  ஏற்பட்ட  பனிப்பாளங்களை வீணாக்காது,மற்ற நாடுகளுக்கு அனுப்பும் எண்ணம் அவருக்குக் தோன்றியது.முதலில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு அனுப்பினார். அவர் நினைத்தது போல் அவ்வளவு எளிதாக இல்லை.  ஐஸ்கட்டிகள் உருகி அவருக்கு பெருத்த நட்டத்தையேக் கொடுத்தன.Spy Pond Ice Harvesting from a 1854 print.jpg

ஐஸ்கீரிம் வணிகத்திலிருந்து அவர் காபி வணிகத்திற்கு மாறினார்.. அதிலும் பெருத்தநட்டம்.  அப்போது அவரது நண்பர் சாமுவேல் ஆஸ்டின் என்பவர்  தனது கப்பல் இந்தியாவிலிருந்து பொருள்களை ஏற்றிவர செல்வதாகவும் போகும்போது காலியாகவே போவதால் அதை டூடர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உதவிட முன்வந்தார். டூடரும் சம்மதிக்கவே பனிக்கட்டியை சுமந்துகொண்டு முதல் கப்பல் இந்தியா வந்தது.

அவரது இந்த முயற்சியை ஊரே  கேலி செய்த போதும் முழு நம்பிக்கையோடு  இந்த வணீகத்தில் ஈடுபட்டார் டூடர். பனிக்கட்டியை துறைமுக்த்தில் ஏற்றுவதற்க்குக் கூட அவருக்கு பணீயாளர்கள் யாரும் முன் வரவில்லை.
அவருக்கு தொடர்ந்து நட்டங்களே கிடைத்தது.. இருந்த போதிலும் நம்பிக்கையை மட்டும் அவர் கைவிடவில்லை...

16000 மைல் கடந்து நான்கு மாத கடலில் பயணித்த  அவரது கப்பல் கொல்கத்தாவை வந்தடைந்தது.முதன்முதலில் பனிக்கட்டியைப் பார்த்த வங்காள் மக்கள் தொட்டால் சில்லிடும் அந்த மாயப் பொருளை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.  அதை  வைத்து என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.



மெல்ல மெல்ல அதனுடைய பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது..பழச்சாறு,மதுபானம்,போன்றவற்றோடு பனிக்கட்டியை சேர்த்துக் கொள்ளும் பயன்பாடு வந்தது,,சிகரம் வைத்ததுபோல,சமைத்த உணவுகள் இரண்டு நாட்கள் வரை கெட்டுப்போகாமல் பாதுகாத்த விந்தை ஆங்கிலேயர்களை  மகிழ்ச்சியில் ஆழ்த்தியது..


டூடரின் வணிகம் விரிவடையத் தொடங்கியது..சேமிப்புக் கிடங்குகளை கொல்கத்தா,பம்பாய்,மற்றும் மதராஸ் போன்ற நகரங்களில் அமைத்தார்.மதராஸிக் அவர் கட்டிய சேமிப்புக்கிடங்கே இன்று  ஐஸ்ஹவுஸ் என்று அழைக்கப்படுகிறது.
Image result for frederic tudor ice king



இந்த வணிகத்தின் மூலம் டூடர் மிகப்பெரிய செல்வந்தர் ஆனார்.அன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவுக்கு இந்தியாவில்லிருந்தே அதிகமான் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்திருக்கிறது.இங்கிருந்து பருத்தி,வாசனைப்பொருள்கள்,தேக்கு,சந்தனம்,மிளகு போன்றவை அதிக அளவில் அனுப்பப்பட்டு வந்திருக்கிறது...வெளிநாட்டு மோகத்தில் கரப்பான் பூச்சிகளும் இங்கிருந்து கப்பலேறின...

நீராவியைக் கொண்டு பனிக்கட்டி தயாரிக்கமுடியும் என்று நிருபிக்கப்படும் வரையில் அமெரிக்காவிலிருந்து  ஐஸ் இறக்குமதி செய்யப்பட்டு வந்திருக்கிறது. ஐஸ் ராஜா என்றழைக்கப்பட்டு வந்த டூடரின் வணிகம் கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது..அவர் உருவாக்கிய சென்னை ஐஸ்ஹவுஸ் விவேகானந்தர் இல்லம் என்றழைக்கப்படுகிறது.  இன்றும் நினைவுச்சின்னமாக இருந்து வருகிறது..



1911லில் கெல்வினேட்டர் நிறுவனம் மூலம் குளிர்சாதனப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.. இந்த 55 ஆண்டுகளில் இந்திய மக்களின் உணவுப் பழ்க்கங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டது,அதில் குளிர்ச்சிக்குப் பழகுதலும் என்ற புதிய தகவமைப்பும் உருவாகியது.  ..மூடப்பட்ட சன்னலும், வெம்மையறியா உடலும் விலக்கப்பட்டசூரியனும் பல நோய்களுக்கும் காரணமாக இருக்கின்றது..

முயற்சி மெய் வருத்தக் கூலி தரும் என்ற பழமொழி இவருக்கு மிகச் சரியாக பொருந்தும்..எவ்வளவு தடைகள் வந்த்தாலும் மனம் தளராது முயற்சி செய்து கொண்டே இருந்தால், வெற்றி  மேல் வெற்றி நம்மைத் தேடிவரும்...

முழு மனதோடு முயல்வோம்...சிகரம் தொடுவோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...