சோம்பல்...
சோம்பல் இல்லா மனிதர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. சிறுவயதிலிருந்தே நம்மோடு ஒட்டிக்கொண்டு நம் சக்தியை எல்லாம் உறிஞ்சிவிடுகிறது. நம் ஆற்றலைப் பிரித்து நம்மை செயல்பட விடாது தடுத்து நம்மை கீழே தள்ளிவிடுகிறது. இதை நாம் உணர்ந்தாலும் நம்மால் இந்த கொடிய பழக்கத்திலிருந்து விடுபடமுடிவதில்லை.சோம்பலில் இருவகைகள் இருக்கிறது. மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு. மனதில் எழும் கருத்துக்கள் மீதான தொடர் சிந்தனையால் மனம் ஒரு நிலையில் சோர்ந்துவிடுகிறது.,தன்னம்பிக்கையும் இழக்கிறோம்..
உடல் சோர்வானது தொடர் உழைப்பால் ஏற்படுகிறது..நம் உடல் பலவீனமும் உடற்சோர்வுக்கு ஒரு காரணாமாக இருக்கிறது..எந்த வகையாயினும் சோம்பல் என்பது நமது முக்கியமான எதிரியே.
இந்த சோம்பலால் நமது மனம் எதிலும் ஆர்வம் இன்றி இருக்கிறது.ஒரு உற்சாகமோ சந்தோச மனநிலையோ இன்றி எதிலும் பிடிப்பின்றி,எப்போதும் கோவமான மனநிலையிலும் எரிச்சலோடும் கடுகடுவென்று இருக்கிறது. தொடரும் இந்நிலையால் நம் வாழ்வே நமக்கு சுமையாகிவிடுகிறது
சோம்பேறியின் மூளை சாத்தானின் இருப்பிடம் என்ற பழமொழிக்கேற்ப நம் மனமானது தேவையில்லாத சிந்தனைகளில் ஈடுபடுகிறது.. நம் மனவளம் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
சோம்பலுற்ற மனம் நம்மை வேலைகளைச் செய்யவிடுவதில்லை.. சாக்குபோக்குகள் சொல்லிச்சொல்லி நம் வேலைகளை தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறது நம் மனம். ..வேலை செய்யாது இருப்பதற்கு ஏற்ற பொய்க் காரணங்களை வரிசையாக அடுக்குகிறது..இதனால் வேலைகள் எதுவும் குறிப்பிட்ட காலத்தில் முடிவடையாது மேலும் நம்மை தொல்லைப்படுத்துகிறது. இதனால் பணிச்சுமையும் அதிகரித்துக்கொண்டே போகிறது..இதுவும் நம்மை மேலும் மேலும் சோர்வடையச் செய்கிறது.பழக்கமாகிவிட்ட இந்த சோம்பலால் நம் நிம்மதியும் மனஅமைதியும் கெடுகிறது. நல்ல விசயங்களை பழகத் தயங்கும் நாம் எளிதில் சோம்பலுக்கு பழகிவிடுகிறோம்.
இந்தக் கொடிய பழக்கத்திலிருந்து எப்படி மீள்வது என்று பார்த்தால் மிக எளிய வழிகள் நிறைய இருக்கின்றன. உடல் ஆரோக்கிய குறைவினால் ஏற்பட்ட சோம்பலென்றால் அதற்க்கான மருத்துவ சிகிச்சையில் சரியாகிவிடும்..அதிக வேலைப்பளு, தொடர் பயணம்,வயது போன்ற காரணங்களால் ஏற்பட்ட சோர்வெனில் சத்தான உணவு,முறையான ஓய்வு,சில உடற்பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகள்,நடைப்பயிற்சி போன்றவைகள் மூலம் சரிசெய்து கொள்ளலாம்..இதனால் நாம் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும்.
சரியான தூக்கமில்லையென்றாலோ, இல்லை தேவைக்கு அதிகமான தூக்கமென்றாலோ சோம்பல் நம்மைத் தேடி வந்துவிடும். ஒரு நாளின் அதிகபட்சம் ஏழு மணி நேரமும் குறைந்தபட்சம் 5 மணிநேர தூக்கம் நமக்கு அவசியம் . இதில் அளவு கூடியோ குறைந்தோ போனால் சோம்பலை நாமே வெத்திலை பாக்கு வைத்து அழைக்கிறோம் என்று அர்த்தம்.சரியான தூக்கம் நம் செயல்திறனை அதிகரிக்கும்.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழ பழக்கப்படுத்திக் கொண்டால் நம்மை சோம்பல் அண்டாது.இதனால் நம்மால் சுறுசுறுப்பாகவும் விரைவாகவும் செயல்படமுடியும்.
அதிக உடல் எடை இருந்தாலும் நம்மால் சுறுசுறுப்பாக வேலை செய்யமுடியாது.ஆற்றல் குறைவே இதற்க்குக் காரணமாகும். எனவே உடல் எடை மீது ஒரு கண் வைத்துக் கொள்ளவேண்டும்.எடை குறைப்புப் பயிற்சிகள் செய்தாலே நம் எடையை சரியான அளவில் பராமரித்திக் கொள்ளமுடியும்..
நமது உணவுப் பழக்கவழக்கங்களும் சரியான முறையில் அமைய வேண்டும்.காலை உணவை எக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்கக்கூடாது. காய்கறிகள்,பழங்களை அன்றாட உணவுப்பட்டியலில் தவறாது சேர்த்துக் கொள்ளவேண்டும். இவை நம்மை உற்சாகமாகவும் புத்துணர்ச்சியோடும் வைத்துக் கொள்ளும்.. எங்கே நாம் தவறுகிறோம் என்று பார்த்து,நம்மை நாமே சரிசெய்துகொண்டால் எல்லா வளமும் பெற்று சிறப்பாக நாம் வாழலாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக