செயலிகள்
புரியும்படிச் சொல்வதென்றால் apps..ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் எல்லோரையும் அடிமைபடுத்தி வைத்திருக்கும் ஒரு நவீன டெக்னாலஜி .நாளொரு மேனியாய் வளர்ந்து கொண்டுவரும் டெக்னாலஜி அரக்கன். தன் பிடிக்குள் சிக்கியவர்களின் நேரத்தை மகிழ்ச்சியாக உண்ணும் அரக்கன்.
மொபைல் பயன்படுத்துபவர்களில் எண்பது சதவீத மக்கள் ஸ்மார்ட்ஃபோன் உபயோகிக்கிறார்கள். இந்த மொபைல்கள் குறிப்பிட்ட சில இயங்குதளங்களில் இயங்குகின்றன .விண்டோஸ்.ஆண்ட்ராய்ட்,ஆப்பிள் போன்றவை அவற்றுள் சில...இந்த எல்லா இயங்குதளங்களும் தங்களுக்கென மொபைல் செயலிகளை உருவாக்கி,வாடிக்கையாளர்களை ஈர்க்கத் தொடங்கின .ஒவ்வொரு மாடல் மொபைலிலும் புதுப்புது செயலிகளைச் சேர்த்துத் தந்து கொண்டிருக்கின்றன.. அது மட்டுமன்றி,வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான செயலிகளை தாங்களே தரவிறக்கம் செய்து கொள்ளும் வண்ணம் ஆயிரக்கணக்கான செயலிகள் அடங்கிய apps stores மொபைலில் தருகின்றன.
இண்டர்நெட் கனெக்சன் இருந்தால் போதும்..தேவையான ,தேவையில்லாத செயலிகள் அனைத்தையும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும். குழந்தைகளுக்கான் கேம்ஸ் செயலிகள் எண்ணிக்கையிலடங்கா அளவிற்கு இங்கே கிடைக்கின்றன. இலவசம் என்பதாலயே தேவையில்லாத செயலிகளையும் பெரும்பாலானோர் டவுண்லோட் செய்கின்றனர். புத்தகப்பிரியர்களுக்கு இந்த இலவச தரவிறக்கச்செயலிகள் ஒரு வரப்பிரசாதமே.. எல்லா மொழி நூல்களையும் இருந்த இடத்திலிருந்தே வாசிக்கமுடிகிறது .செய்திகளை சுடச்சுட, உடனுக்குடன் அளிப்பதற்கு, முதன்மை செய்தித்தாள்களின் செயலிகள் உதவிகரமாக இருக்கின்றது.
வங்கிகளின் தனிப்பட்ட வங்கி செயலிகள் தங்கள் வாடிக்கையாளர்களை எளிதில் ஈர்க்கின்றன. ஆன்லைன் பேங்கிங் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதில் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளமுடிகிறது. வங்கிக் கணக்கை சரி பார்த்துக் கொள்ளமுடிகிறது.
குறைக்க ஒரு செயலி, எடை கூட்ட ஒரு செயலி, ஆடை ஆபரணங்கள் ,விளையாட்டு பொருள்கள், மளிகைப் பொருள்கள், வீட்டுக்குத் தேவையான பொருள்கள், பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள ,தங்கும் இடங்களை முன்கூட்டியே பதிவு செய்ய, இன்னும் என்னவெல்லாம் நமது ஆசையோ அவற்றையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள செயலிகள் என்று, உலகமே இன்று செயலிகளால் தான் சுற்றுகிறது.
இந்த செயலிகள் நமது வேலைகளை குறைத்தாலும் இவற்றால் 90%தீமையே விளைகிறது.. தொடர்ந்து மொபைல் உபயோகிப்பதால் உடல்நலம் கெடுகிறது. கண் பார்வை கெடுகிறது .தலைவலி போன்ற உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.
குறிப்பாக உணவு சம்மந்தப்பட்ட செயலிகள்... வீட்டில் சமையல் செய்து, செய்து சலிப்படைந்த இல்லத்தரசிகளுக்கும்,சமைக்கத் தெரியாத ஆண்களுக்கும் இந்த செயலிகள் எவ்வளவுக்கெவ்வளவு உதவிகரமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு தீமைகளும் உண்டு. இந்த வகை செயலிகளில் மரபு வகை உணவுகள் கிடைப்பதில்லை.. நமது சூழலுக்கு ஒத்துவராத, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுகளையே பெரும்பாலும் இந்த செயலிகள் மூலம் பெற முடிகிறது.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு தீமை என்னவென்றால் லொகேசன் ட்ரேப்.. அதாவது இந்த செயலிகள் வாடிக்கையாளார்களை ஈர்ப்பதற்க்காக அவர்களிருக்கும் இடங்களின் தகவல்களை முன்கூட்டியே அளிப்பதற்க்காக , நம்மிடம் இந்த செயலிகள் மூலம் இருப்பிடத்தை உபயோகப்படுதிக்கொள்ள அனுமதி கேட்கின்றன. நாமளும் அதன் காரணம் புரியாமல், ஓகே என்று அனுமதி குடுத்துவிடுகிறோம். இதன் மூலம் நம்மை கண்காணிக்கும் ஒற்று வேலையைத் தொடங்கிவிடுகின்றன
இந்த செயலிகள். இதனால் நமது,ப்ரைவசி குறைந்துகொண்டே போகிறது.. நாம் கழிவறைக்குச் சென்றாலும் நம்மை கண்காணிக்கின்றன இந்த செயலிகள். நம்மையும் அறியாமல் நம்மைப் பற்றிய குறிப்புகள், தகவல்கள் திருடப்பட நாமும் ஒரு காரணியாகிவிடுகிறோம். நமது கவனக் குறைவும் சோம்பேறித்தனமும் நமது அலட்சியப்போக்கும் நமக்கு இழப்பையே அதிகம் தருகிறது இந்தச் செயலிகள். மனிதன் பணத்திற்கு அடிமையாகி இருந்த நிலை மாறி இன்று கருவிகளுக்கும் டெக்னாலஜிகளுக்கும் அடிமையாகிக் கிடக்கிறான். இதனால் நாம் தூக்கத்தை இழக்கிறோம், உறவுகளை இழக்கிறோம், உடல்நலத்தை இழக்கிறோம், கஷ்டப்பட்டு உழைத்து ஈட்டிய பணத்தை இழக்கிறோம்.
இந்தச் செயலிகளின் பின்னாலிருக்கும் வணிகத்தை நாம் உணராமல் நம்மை தொலைத்து, அவர்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறோம். ஊரையடித்து உலையில் போடும் இந்தக் செயலிகளை ஒரு கட்டுப்பாட்டு விதிக்குள் அரசு கொண்டுவந்தால் இழப்புகள் பெரும் அளவிற்கு குறையும்.. இலவச செயலிகளைக் குறைத்து,காசு கட்டிப் பார்க்கும் செயலிகள் அதிக அளவில் வந்தால், நமது தகவல்கள் திருடு போவதை தடுக்கலாம்.. இதனால் ஒரு தலைமுறைக்கே விடுதலை பெற்றுத்தந்த பெருமை நமக்கு கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக