பட்ஜெட்
நமக்கு மிகவும் தெரிந்த சொல்... அதே சமயம் நாம் கண்டுக்காத சொல் கூட.. பட்ஜெட்னா நிதி நிலை பற்றிய ஒரு அறிக்கைனு நம்ம எல்லார்க்கும் நல்லாத் தெரியும். ஒவ்வொரு நாட்டுலயும் வருசத்துக்கு ஒரு தடவ பட்ஜெட் , அதாவது வரவு செலவு கணக்கு பாப்பாங்க. எவ்ளோ வந்துருக்கு ,எவ்ளோ போயிருக்கு ,எவ்ளோ மிச்சம் இருக்குனு பாத்து நிதிநிலை அறிக்கை ஒண்ணு தயார் பண்ணுவாங்க. இது மூலமா நாம என்ன செலவு செஞ்சோம், எந்த செலவ குறைக்கணும், எதுக்கு அதிக பணம் ஒதுக்கணும் , இன்னும் என்ன என்ன அவசிய செலவுகள் செய்யனும், அதுக்கு எவ்வளவு ஒதுக்கணும்ங்ற ஒரு விரிவான அறிக்கை இது. இத பொறுத்து தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரும்பாலும் அமையுது..
நாட்டுல மட்டுமில்ல, பெரிய பெரிய அலுவலகங்களிலும் கூட பட்ஜெட் போடுறது வழக்கம். இன்னைக்கு பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் இருக்கு..பணம் சம்பாதிப்பது எளிதாகவும் இருக்கு...ஆனா சம்பாரிச்ச இந்தப் பணத்த முறையா செலவு செய்யுறவங்க எண்ணிக்கை ரொம்ப குறைவு.. பதினைந்து வருடங்களுக்கு முன்னாடிலாம் சம்பாதிக்க அதிகமா உழைக்க வேண்டி இருந்துச்சு.. ஆனா இப்போ அப்படி இல்ல. சம்பாத்தியம் எளிதாகிருச்சு... செலவுகள் அதவிட எளிதாக செய்ய முடியுது..
பதினைந்து வருசங்களுக்கு முன்னாடி ஒருத்தர் ரிடையர்டு ஆகுறப்ப வாங்குற சம்பளத்த இப்போ உள்ள இளைஞர்கள் இருபத்தி ஐந்து வயசுலயே வாங்கிற்றாங்க. அதுனால அவுங்களுக்கு பணத்தோட அருமை தெரியமாட்டேங்குது.
எவ்ளோ எளிதா சம்பாதிக்குறாங்களோ அவ்ளோ எளிதா செலவும் செய்யுறாங்க. எளிதாக கிடைத்த ஒன்று எளிதாக கைவிட்டுப் போய்விடுகிறது.. இதை எப்படி சரி செய்வது?
குழந்தைகள் சொல்லிக் குடுப்பதை விட பார்ப்பதை, எளிதாக கத்துக்குறாங்க .ஒவ்வொரு வீட்டுலயும் பட்ஜெட் போடுற பழக்கம் இருந்திருந்தா இளைஞர்கள் பெற்றோர்களிடமிருந்தே பழகிருப்பாங்க. அதனால் அவுங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைத்திருத்திருக்கும் .அவுங்க கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தது வீணாக செலவு ஆகிருக்காது. ஆனா அத பெற்றோர்கள் அத செய்வதில்லை..
பிள்ளைகள் கேக்குறதயெல்லாம், கேக்குறப்பலாம் பெற்றோர் வாங்கித்தற்றதுனால பிள்ளைகளுக்கு தனக்கு எது அவசியம், எது முக்கியத் தேவைங்ற ஒரு விசயம் தெரிவதேயில்லை.. அதனோட பலன் தான் இன்னைக்கு இருக்கும் இளைய சமுதாயம் பணத்தின் மதிப்பு தெரியாமலேயே ஆடம்பர பிரியர்களா ஆகிற்றாங்க..வரவு செலவு எழுத தெரிஞ்சுகிட்டா போதும்,அவசியம் எது, அனாவசியம் எதுனு எளிதாக புரிஞ்சுகிடுவாங்க...பணத்தயும் சேமிக்க ஆரம்பிச்சுருவாங்க...
பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இந்தப் பழக்கத்தை ஊக்குவிக்கனும்.
வரவு செலவு கணக்கு எழுதுவது ஒண்ணும் பகீரதப் பிரயத்தனம் இல்லை.நம் அன்றாட வரவு செலவுகளை ஒரு நோட்டிலோ இல்ல டைரிலயோ எழுதி வந்தா போதும். வரவுகள் ஒரு பக்கமும் செலவுகள் ஒரு பக்கமும் எழுதணும். ஒவ்வொரு மாத முடிவிலயும் கணக்குப் பார்த்து இரண்டு பக்கமும் வருகிற தொகை சரியா இருக்கானு பாத்தா போதும்..நம் குடும்பத்து நிலமை எப்படி இருக்குனு தெரிஞ்சுரும். வரவை விட செலவு அதிகம் வந்தால், எந்த செலவு அதிகம் செஞ்சுருக்கோமோ அந்த செலவை குறைக்க வேண்டும்.. அநாவசிய செலவுகளை நிறுத்திவிட வேண்டும்...
செலவ விட வரவு அதிகமா இருந்தா நம்மள நாமளே தட்டிக்குடுத்துக்கலாம். ஏன்னா,செலவளிக்கப்படாத தொகையும் ஒரு வருமானம் தான். அதிகப்படியான இந்தத் தொகையை வங்கியிலயோ இல்ல அஞ்சலகத்திலயோ ஒரு கணக்கு துவங்கி மாதமாதம் போட்டுக்கிட்டே வந்தா நாளடைவில நம்முடைய உபரி வருமானம் நமக்கு ஒரு நல்லத் தொகையை சம்பாதிச்சுக் குடுக்கும்..இது மூலமா நம்முடைய வாழ்க்கைத்தரம் மேலேறும்.. நாமளும் இந்த உலகை சுற்றி வர வேண்டாமா... விலையுயரந்த கார்கள்ல பவனி வர வேண்டாமா.. அதுக்கான முதல் அடியை இன்றே எடுத்து வைப்போம்.. இன்றே வீட்டுக்கான பட்ஜெட் போடுவோம்...
நம் வாழ்க்கையை நாமே கட்டமைப்போம்... வாழ்க வளமுடன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக