ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

GERIATRICKS முதியோர் நலன்

ஜீரியாட்ரிக்ஸ்


                    கேள்விப்படாத பெயர்போல இருக்குதுல...நவீன  மருத்துவத்தில் வயது முதிர்ந்தவர்களுக்கான  உடல்நலன் காக்கும் சிகிச்சைக்குத்தான் இந்தப் பெயர் .  இதற்க்கான  சிறப்பு மருத்துவர்கள்  ஜீரியாட்ரிசியன்.                                                             முதியவர்களுக்கு வரக்கூடிய நோய்களை கண்டறிதல்,
அதற்க்கான சிகிச்சை அளித்தல் மற்றும் நோய்கள் வராது தடுத்தல் போன்றவற்றில் முறையான  சிறப்புப் பயிற்சி பெற்றிருப்பார்கள். மருத்துவத்துறை ,தொழில்நுட்பத்துறை மற்றும் சத்தான உணவு பழக்கவழக்கங்களில்  ஏற்பட்ட  காரணமாக இன்று உலகம் முழுவதும் 65 வயதுக்கு  மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காடுக்கும் மேல் அதிகரித்துள்ளது. எனவே முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவம் பற்றி அறிந்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
                          நமது உடலில் வயது கூட, கூட  சில பல மாற்றங்கள் ஏற்படுகிறது. பொதுவாக பெரியவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையோ ,மருந்துகளோ வயது முதிர்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும் போது ,தேவையான அல்லது எதிர்பார்க்கும் பலன் தருவதில்லை.  பொது மருத்துவரோ அல்லது குடும்ப மருத்துவரோ சராசரியான உடல் நலத்தோடு இருக்கும்  முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கமுடியும். ஆனால் வயோதிகம் காரணமாக வரக்கூடிய சில நோய்களுக்கு அதற்க்குறிய சிறப்பு மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதே நல்லது. அதனால் வயதில் மூத்தவர்களுக்கான இந்த சிறப்பு மருத்துவம் அதிக கவனம் பெறுகிறது.
                    முதியோர் மருத்துவர்களுக்கான தேவை இந்தியா  போன்ற வளர்ந்து வரும் நாட்டில்  மிகவும்  தேவை. மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாட்டில் வரும் காலங்களில் நவீன மருத்துவத்தின் விளைவாக முதியோர்களின்  எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதிலும் முதியோரின் வாழ்க்கை, பல காரணிகளால் அவதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள காலகட்டத்தில்,  இந்த மருத்துவர்களின் தேவை அதிகரிக்கிறது
                 முதுமை ஒரு மனிதனின் வாழ்வில் எதிர்பாராத பல விளைவுகளைக் கொண்டு வந்துவிடுகிறது.. அதுவரை அவன் பார்த்து ரசித்த அவன் புறத்தோற்றத்தில் நிறைய மாறுதல்கள்... தோல் சுருங்கிப் போதல், கேட்கும் சக்தி குறைதல், எளிதில் புரிந்து கொள்ளும் திறன் குறைதல், செரிமானக் குறைபாடு,சுவையுண்ர்ச்சிக்  குறைதல் , நரம்பு மண்டலம் பாதிப்படைதல், வேகமாக செயல்பட முடியாதிருத்தல் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்,  தனிமை, வருமானம் இல்லாதிருத்தல் இவையெல்லாவற்றாலும் வரக்கூடிய உளவியல் பாதிப்புகள்  என்று சொல்லிகொண்டே போகலாம்..வயோதிகத்தில் மனிதனை எளிதில் நீரிழிவு, இதய நோய், மூட்டுவலி இரத்த அழுத்தம்  போன்றவை  தாக்குகிறது.
                   இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது இவர்களுடைய உடல் மற்றும் மனநலத்தையும் பரிசோதித்துவிட்டே மருந்துகள் தரவேண்டும். இவர்கள்  இருப்பிடம்,உடன் இருப்பவர்களிடம் இவர்களுக்கு உள்ள மனநிலை, உடனிருப்பவர்களின் அணுகுமுறை,இவர்கள் ஏற்கெனவே சாப்பிட்டுவரும் மருந்துகள், இவர்களின் வாழ்க்கைத்தரம், இவர்களின் பொழுதுபோக்கு போன்ற பல விசயங்களையும் கவனத்தில் கொண்டே சிகிச்சைகள் அளிக்கப்படவேண்டும்.
                   சில முதியவர்கள் சுயமருத்துவத்தை மட்டுமே நம்புவார்கள்.. கை வைத்தியம் மற்றும் சுயமருத்துவத்தை முதியவர்கள் குறைத்துக்கொள்ளவேண்டும். தளர்ந்துவிட்ட தன் உடலின்  தேவை குறித்த போதுமான தெளிவு இல்லாத நிலையில் அவர்கள் தங்களுக்கு தாங்களே சுயமாக மருத்துவம் செய்து கொள்வதோ அல்லது பழைய மருந்துச்சீட்டை வைத்து மருந்துகள் வாங்கி உபயோகிப்பதோ அவர்களை சிக்கலில் கொண்டுவிடும்.   அதனால் முறையான மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் எடுக்கக்கூடாது
                  தங்கள் வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் சிலர்,வாழ்வின் மீதான சலிப்பில்  மருத்துவர்களோடு  சரியாக ஒத்துழைக்க மாட்டார்கள்.அவர்களிடம் அன்பாக பேசி,நம் வழிக்கு கொண்டு வரவேண்டும்.  இவர்களுக்குத் தேவையான கவுன்சிலிங் அவ்வப்போது சரியான முறையில் கொடுக்க வேண்டும்.

               இவ்வாறு முதியோர்களின் உடல் நலன்,மனநலன்  பேணிக்காத்து,அதற்கேற்ற மருந்துகளைத் தரும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும். இத்தகைய மருத்துவர்களை நாம் ஜீரியாடிரிஸ்ட் என்றழைக்கிறோம். மருத்துவர் மட்டுமே இவர்களுடைய் நோய்களை குணப்படுத்திட முடியாது. குடும்பத்தினரின் பூரண ஒத்துழைப்பும் வேண்டும். அவர்களின் அரவணைப்பே மிகச் சிறந்த மருந்தாகும். அவர்களோடு நேரம் செலவிட வேண்டும். அவர்களுடைய தேவைகள் நிறைவேற்றப்பட்டனவா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். முதியவர்களின் உடலில் நீர்ச்சத்து குறையாது பார்த்துக் கொள்ளவேண்டும் . மனதளவில் சந்தோசமாக வைத்துக் கொள்ளவேண்டும்.  இதனால்  மன அழுத்தம் வராமல்  தவிர்க்கமுடியும்.
                   ஜீரியாட்ரிஸ்ட்களின் உதவியோடு முதியவர்கள் தங்கள் வாழ்வின் இறுதிப்பகுதியை நிறைவாக வைத்துக் கொள்ளமுடியும். மனநிறைவாக வாழமுடியும். தங்களைச் சுற்றி இருப்பவர்களோடு இணக்கமாக வாழ்ந்தாலே பாதி நோய்கள் குணமடையும். மருந்துகளையே உணவாக சிலர் உண்பர். சிலர் உணவையே மருந்தாக உண்பர். சிலர் உடல் மருந்துகளை ஏற்றுக்கொள்ளும். சிலருக்கு வீரியமான மருந்துகளை கொடுக்க முடியாது.அந்த மாதிரி சமயங்களில் அவர்களுக்கு பிசியோதெரபி மட்டுமே கொடுக்க வேண்டிவரலாம். இவையெல்லாவற்றையும் தகுந்த ஜீரியாட்ரிஸ்ட்களின் அறிவுரையின்படியே செய்ய வேண்டும்.

                         குழந்தை நல மருத்துவர் போல் வயோதிகர் நல மருத்துவர்களிடம் மட்டுமே முதியவர்களை  பரிசோதிக்கவேண்டும்.அதனால் அவர்களது முதுமையை அவர்களால் ரசிக்கமுடியும். ஒவ்வொரு நொடியிலும் வாழமுடியும் .இன்றைய இளைஞர்களே  நாளைய முதியவர்கள் என்பதை நாம் மறந்திடக் கூடாது. முதஇயவர்கள் நம் சொத்து. அவர்களை நாம் போற்றி,பேணி காப்போம்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...