சனி, 11 ஆகஸ்ட், 2018

ஆபத்தான ஆன்லைன் கேம்ஸ்

 ஆன்லைன் கேம்ஸ்--

                      நாம  வாழ்ற இந்த இண்டர்நெட் யுகத்துல எவ்வளவோ  முன்னேற்றங்கள்.. எவ்வளவோ கண்டுபிடிப்புகள்....  உலகின் முதல் கணினியை வைக்குறதுக்குன்னே ஒரு பெரிய அறை தேவைப்பட்ட காலம் போய், இன்னைக்கு நம்ம உள்ளங்கைக்குள்ளயே  உலகத்தையே  வச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கோம்.
                    ஒரு காலத்துல ,வெளியூர்ல இருக்குறவங்ககிட்ட பேசனும்னா ட்ரங்க்கால் புக் பண்ணி,  காத்திருந்து தான் பேசிக்கிட்டு இருந்தோம் .. ஆனா இப்ப?  நினைச்ச உடனே, உலகத்துல எந்த மூலையிலை இருக்குறவங்ககிட்டயும் , அடுத்த நொடி நம்மளால பேசமுடியுது..  பாத்துக்க முடியுது.  பாத்துக்கிட்டே பேசவும் முடியுது.  இதுக்குலாம் முழு முதற்  காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி தான்.

                 அதுவும் இணையத்தின் அபரிதமான வளர்ச்சி நம்மைக் கொஞ்சம் மிரளவே வைக்கிறது. இந்த வளர்ச்சி ஆக்கத்தை மட்டுமே  தந்திருக்கானு  பாத்தா.... கடவுள் பாதி...மிருகம் பாதிங்கற மாதிரி  நல்லதும் இருக்கு..கெட்டதும் இருக்கு...இதுல இருக்குற கெட்டதுல முன்னாடி வந்து நிக்குறது என்னன்னா .... ஆன்லைன் கேம்ஸ்... இந்த ஆன்லைன் கேம்ஸ் மிக எளிதாக குழந்தைகளையும் இளைஞர்களையும் கவர்ந்து, அவங்கள  அடிமையாக்கிவிடுகிறது.  ஆன்லைன்ல முகம் தெரியா மனிதர்களுடன் சேட்டிங்ல் ஆரம்பிக்கும் குழந்தைகள்  நாளாடைவில், தங்களுடன்  சேட் செய்யும் அந்த நபர்கள் என்ன ... என்ன சொன்னாலும் கீழ்ப்படிய ஆரம்பிச்சுற்றாங்க....விளையாட்டு முற்றி, வினையாய்... அதாவது தங்கள் உயிரயும்கூட  மாய்த்துக் கொள்ள அவர்கள் தயங்குவதில்லை. அந்த அளவிற்க்கு மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.


நீலத் திமிங்கலம்

                   நீலத் திமிங்கலம் அதாவது ப்ளு வேல்ங்ற ஒரு ஆன்லைன் கேம் ஒரு வருடத்துக்கு முன்னாடி வந்து பல  இளம் உயிர்கள பலி வாங்குனது நம்மளுக்கு நல்லாவே ஞாபகத்துல இருக்கும்... இந்த விளையாட்டு விளையாடுபவர்களுக்கு தினம்  கட்டளைகள் அதாவது டாஸ்க் வரும். இதைச் செய்.. அதைச் செய்யுனு ... ஐப்பது டாஸ்க்கள் தரப்படும் .ஒரு  கட்டத்துல  நாம விரும்பினாலும்,  இந்த விளையாட்டிலிருந்து  வெளியே வரமுடியாது...கீழ்ப்படிய மறுப்பவர்கள்  மிரட்டப்படுவதால், வேறு வழியின்றி கடைசிவரை விளையாடியே  தீரவேண்டும். ஒவ்வொரு டாஸ்க்கும் பயங்கராமான அளவில் இருக்கும்...அதுல கடைசியா வர்ற டாஸ்க் தான் கொடுமையிலும் கொடுமை... அவுங்க சொல்றமாதிரி தற்கொலை செய்துகொள்ளச் சொல்லி வரும் இந்த ஆபத்தான விளையாட்டால் நாம்  இழந்த உயிர்கள்  நிறைய.

மோமோ
                       இப்ப புதுசா இதே மாதிரியான ஒரு கேம் வாட்ஸப் மூலமா பரவிக்கிட்டு இருக்கு.  அந்த கேம் தான் MOMO..  சமீபத்துல  இந்த விளையாட்டுனால அர்ஜெண்டினா  நாட்டு பன்னிரண்டு வயது பெண் குழந்தை  பலியாகியிருக்கிறது  மிகவும் வருத்தத்திற்க்குரியது. அந்தக் குழந்தையின் மொபைல் எண்ணுக்கு ஜப்பான் நாட்டு எண்ணிலிருந்து ஒரு நட்பு அழைப்பு வந்திருந்திருக்கு. தன் பெயரை மோமோ என்று சேமித்துக்கொள்ளும்படி  கூறியிருக்கு  அந்த அழைப்பு.  அந்தச் சிறுமியும் அழைப்பை ஏற்றுக்கொண்டப்பின், சேட்டிங்கில் மிக நெருக்கமாகப் பழகி, ரகசியங்களைத்  தெரிந்து கொண்டு,   அந்தரங்க புகைப்படங்களையும் வாங்கிக் கொண்டு தன் விருப்பப்படி அந்தக் குழந்தையை ஆட்டுவித்திருக்கிறது மோமோ.  ப்ளு வேல் போல் கட்டளைகள் செய்யச் சொல்லி தினமும் கட்டளைகள் வந்திருக்கிறது. செய்ய மறுத்தால்,மிரட்டி செய்ய வைத்துள்ளது மோமோ.  இறுதியாக தற்கொலை செய்து கொள்ளும்படி வந்த கட்டளையைப்  பார்த்து, மோமோ சொல்லிய படியே தூக்கு மாட்டிக்கிட்டு  இறந்துட்டா அந்தச் சிறுமி..

                சொர்க்கத்துக்கு போகும் வழி என்று  இறந்துபோன குழந்தைகளின் புகைப்படங்களை  அனுப்பியிருக்கிறது மோமோ. அந்தப் புகைப்படங்களை டவுண்லோட் செய்யுரப்ப, ,அதுல இருக்கும் மால்வேர்கள் மூலமா நம்  மொபைலின் முன் பகுதியில் இருக்கும் கேமரா, மோமோவுடைய கண்ட்ரோலுக்குப் போய்விடுகிறது.  அதனால்  நாம் செய்வதையெல்லாம்  உடனுக்குடன் தெரிந்து கொள்கிறது மோமோ.  இந்த தகவல்களை வைத்துக் கொண்டு மிரட்டியும் மூளைச்சலவை செய்தும் குழந்தைகளைத்  தன் கட்டுப்பாட்டுக்குள்  வைத்துக் கொள்கிரது இந்த மோமோ.. இந்த விளையாட்டு தற்பொழுது, உலகம் முழுதும் பரவ ஆரம்பித்திருக்கிறது .மேலும் உயிர்களை பறிக்குறதுக்கு முன்னாடி,   நாம் நம் குழந்தைகளைக்  காப்பாற்றவேண்டும்.  நம் குழந்தைகளின் மொபைலில் இதுபோன்ற பெயரில் எண்கள் சேமிக்கப்பட்டிருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டியது அவசியம். மேலும் ,குழந்தைகளோடு தினமும் சிறிது நேரம் செலவழித்து அவர்களின் அன்றாட செயல்பாடுகளை அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும். துரிதமான நடவடிக்கையால்  இன்னொரு உயிரிழப்பை தடுக்க முடியும். இந்த விளையாட்டை யார் நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை..உலகெங்கும்  இது குறித்து தீவிரமாக  விசாரித்து வருகிறார்கள்..

கிகி சேலஞ்ச் 

     கேம்மா இல்லாம சாலஞ்சுங்கற பெயருல வந்து உயிர் பறிச்சிக்கிட்டு  இருக்குற  இந்த  புது விளையாட்டு  KIKI   சேலஞ்ச்....இது என்னன்னா.. நாம கார்ல போகுறப்ப in my feelings ங்ற பாடலை ஒலிக்க விட்டு, அந்தப்  பாடலில் வரும் kiki... do you love me?ங்ற வரிகளுக்கு ஓடும் கார்ல இருந்து இறங்கி காரின் வேகத்துக்கு ஏற்ப ஆடிக்கொண்டு வரவேண்டும். இதை இன்னொருத்தர் ஒளிப்படமாக எடுத்து இணையத்துல அப்லோட் பண்ணனும். அப்படியே நாம ஒரு நாலு பேருக்கு இந்த சேலஞ்ச குடுக்கணும்.  இப்படியே  வைரலாக  பரவ ஆரம்பித்தது இந்த சேலஞ்ச்.  சில ஹாலிவுட்  நடிகர்களும் இந்த சேலஞ்ச்  ஏத்துக்கிட்டு ஆடிருக்காங்க. மிக வேகமா பரவி வரும் இந்த சேலஞ்ச்னால் ஒரு சிலர் எதிர்பாராத விதத்துல உயிரிழக்க நேரிட்டது தான் மிகப்பெரிய துயரம். பின்னாடி வரும் வண்டிகள்னால் ஏற்ப்பட்ட விபத்துக்ளே இதற்க்குக் காரணம். இதில் பாதிப்புக்குள்ளாவது நம் இளைய சமுதாயமே.

                இளைய சமுதாயத்திடம் தற்போது ஒருவித ஆபத்தான போக்கு வளர்கிறது .  மற்றவர்களின் கவனத்தைக்  கவருவதற்க்காக, சமூக வலைத்தளங்களில் கிடைக்கக்கூடிய லைக்ஸ் மற்றும் ஷேர்கள் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் வளர்ந்துகிட்டே வருது . எதிர்பாலினத்தை ஈர்க்கனும்ங்ற  ஆர்வக்கோளாறுல அர்த்தமில்லாத ,அறிவுக்குப்  புறம்பான செயல்கள்ல ஈடுபட்டு ,அத யூ ட்யூப்ளயோ அல்லது முகநூல்லயோ அல்லது ட்விட்டர் ,இண்ஸ்டாகிராம்,டம்ளர் போன்ற எண்ணற்ற வலைதளங்கள்ல பதிவா போடுறத ஒருபெரிய சாதனையா நினைக்குறாங்க. இந்த லைக்ஸ் ஷேர்கள வச்சு ஒரு நயாபைசா  கூட   சம்பாதிக்கமுடியாதுனு  தெரிஞ்சிருந்தும் , மற்றவர்களின்  கவனத்தை ஈர்க்கனும்னு சிலர் ஆபத்தான இடங்களில் நின்னுக்கிட்டு செல்ஃபி எடுக்குறேன்னு தங்கள் உயிரயே இழந்துருக்காங்க..




                இப்பிடி ஒரு க்ரூப்  உயிர விட சுயவிளம்பரம் தான் முக்கியம்னு இருக்குற  நேரத்துல சைலண்ட்டா இன்னொரு பக்கம் ஒரு கொடூரமான சைக்கோக்கள்கிட்ட சிக்கிக்கிட்டு நம் பிள்ளைகள்  உயிரிழக்கும் சம்பவங்களும்  நடந்துக்கிட்டு  இருக்குறத பாக்கும்போது மனசு   பதறத்தான் செய்கிறது.
                           நம்மள குழந்தைகள் தொந்தரவு  செய்யக்கூடாதுனு சின்னக்குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி குடுத்துட்டு, நம்ம கடமை முடிஞ்சிருச்சுனு பெற்றோர் நிறைய பேரு எனக்கென்னனு  இருக்குறாங்க. பிள்ளைகள் என்ன செய்யுறாங்க,யார் கூட பேசுறாங்கனு கவனிக்குறதே இல்லை. விளைவு,?
                       குழந்தைகள் நல்ல பகிர்தலுக்கு ஆளின்றி தவிக்கையில் தங்கள் வெறுமையைப் போக்க ஆன்லைன்ல முகம் தெரியா மனிதர்கள்கிட்ட சேட்டிங்க் , ஆன்லைன் கேம்ஸ்னு பாதை மாறுறாங்க..பின்னால, அத விட்டு வெளியே வரத்தெரியாம சிக்கல்ல மாட்டிக்கிட்டு தவிக்குறாங்க. இதனால வரப்போகும் பரம்பரையே நாசமா போய்க்கிட்டு இருக்குறத  பெற்றோர்கள் உணருவதேயில்லை.
                          பக்கத்து வீட்டுல நடக்குற தவறுகள் நம்  வீட்டு கதவத் தட்ட ரொம்ப நாளாகாது. எனவே  பெற்றோர்கள் தங்கள்  கடமை உணர்ந்து பொறுப்பாக நடந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இனிமேலும் இது போன்ற இழப்புகள் வராத வண்ணம் நம்மையும் நாட்டையும் காப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புது வருடம்...புது வசந்தம்...புது சபதங்கள்.

                புது வருசம்னாலே  நிறைய தீர்மானங்கள் எடுத்துக்கனும்ங்ற சம்பிரதாயத்த யாரு உருவாக்குனதுனு தெரில..வருசாவருசம் புதுப்புது தீர்மா...