இனியாவது வாழ்வோம்..
நம்முடைய இந்த வாழ்வு யாரால் வாழப்படுகிறது.... ?நாம் வாழ்கிறோமா இல்லை நம்மிடத்திலிருந்து மற்றவர்கள் வாழ்கின்றார்களா? என்னைக்காச்ச்சும் நெனச்சுப் பாத்துருக்கோமா?
நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் இரட்டைத் தன்மை கொண்டது .நல்லது-கெட்டது, இரவு-பகல், இன்பம்-துன்பம் இப்பிடி சொல்லிகிட்டே போகலாம். நமது வாழ்க்கைப் பயணம் எப்பொழுதுமே நேர்கோட்டில் அமைவதில்லை...சில வளைவுகள் சில சுளிவுகள் கண்டிப்பா இருக்கும்.அப்பிடி இருந்தாத் தான் வாழ்க்கை போரடிக்காம இருக்கும்.
நெளிவு சுளிவான சமயங்கள்ல வாழ்க்கைய நாம் எப்பிடி சந்திக்கிறோம்ங்றது தான் முக்கியம். நாம் இயல்பா அத கடந்து போக முடிஞ்சா ரொம்ப நல்ல விசயம் தான். ஆனா, பெரும்பாலான சமயங்கள்ல நம்மள யாராது அலேக்கா தூக்கி ,அந்தப் பக்கம் வச்சிர மாட்டாங்களானு தான் பாக்குறோம்...அதயே தான் எதிர் பாக்குறோம்..சார்ந்திருப்பதோ, உதவி எதிர் பாக்குறதோ தப்பு இல்லதான்..ஆனா அதே நேரம், பாரமாகிறக்கூடாதில்லயா...
சோ,நமக்கு வருகிற சங்கடங்கள்ல இருந்து வெளீய வர்றதுக்கான வழிகள நாமளே நல்லா யோசிச்சு முடிவெடுக்கனும். அதே நேரம் யோசிச்சுக்கிட்டேயும் இருக்கக்கூடாது.நாம எடுக்குற சில முடிவுகள் சரியாவும் இருக்கலாம்...தப்பாவும் இருக்கலாம் .ரெண்டுக்குமே பொறுப்பு நாம தான். பொதுவா ஒரு முடிவு எடுக்க நாம தயங்கவோ இல்ல ரொம்ப யோசிக்கவோ செய்யுறோம்னா என்ன காரணம் தெரியுமா? நாம பொறுப்பேற்கத் தயாரா இல்லங்றது தான் காரணம்.. நம்ம வாழ்க்கைக்கு நாம பொறுப்பேற்க்க மத்தவங்க முன்வரணும்னு எதிர்ப்பாக்குறோம்.அப்ப தான் மத்தவங்கள உன் தப்புதான்னு குற்றம் சொல்லமுடியும்..இல்லையா... நம்ம வாழ்க்கைக்கு நாம பொறுப்பேற்க்காத வரைக்கும் ,நம்ம வாழ்க்கைய மத்தவங்க தான் வாழ்வாங்க...அப்புறம் உருண்டு பொரண்டு அழுது புலம்புறதுனால என்ன பிரயோசனம்..
நம்ம வாழ்க்கைய நாம விரும்புற மாரி அமைச்சுக்கனும் ஆச படுற நாம அதுக்கேத்தமாரி உழைப்ப போட்ருக்கமானு கொஞ்சம் யோசிச்சு பாத்தா எங்க தப்பு பண்றோம்னு நம்மளுக்கே புரியும்.. நாளைக்கு நாளைக்குனு தள்ளிப் போடுற குணம், செய்யணுமாங்ற சலிப்புத்தன்மை, யாராது செஞ்சு குடுக்கமாட்டாங்களாங்ற சோம்பேறித்தனம், வெந்ததைத் தின்னுட்டு விதி வந்தா சாவோம்ங்ற மனப்பான்மை, எனக்கு மட்டும் ஏன் இப்பிடி நடக்குதுங்ற எதிர்மறை எண்ணங்கள்..இப்பிடி சொல்லிக்கிட்டே போகலாம்.. இதெல்லாமே நம்ம தலைல நாமளே மண்ண வாரிப் போட்டுக்கிறதுக்குச் சமம்.
நம்மள கட்டிப் போடுற இந்த சங்கிலிகள ஒவ்வொண்ணா நாம அத்துப் போடப் போட, வாழ்க்கைல ஒவ்வொரு படியா நாம ஏறிக்கிட்டு இருக்கிறத உணர முடியும்.. முதல் முய்ற்சி என்னைக்குமே வெற்றி தராது... விடாமுயற்சி தான் வெற்றி தரும். மனக்குரங்கு நம்மள வெற்றிய ருசிக்கவிடாம எவ்வளவோ ஆட்டங் காட்டத்தான் செய்யும்.. நம்முடைய நெனப்பெல்லாம் நம்ம குறிக்கோள்ல இருந்தாப் போதும். குரங்க அடிச்சு விரட்டிறலாம்.
நமக்கு என்ன வேணும், நாம என்ன ஆக நெனக்கிறோம்ங்றதுல தெளிவு கண்டிப்பா இருக்கணும். நாலு நாளைக்கு ஒரு தடவ இது வேணாம்..அது வேணும்னு மாத்திக்கிட்டே இருந்தா நம்மளால ஜெயிக்க முடியாது.. சோ,என்ன வேணும்ங்ற தெளிவு கண்டிப்பா இருக்கணும்.அந்த தெளிவு வந்துட்டா போதும். அத எப்பிடி அடையுறதுனு யோசிக்க ஆரமிச்சுருவோம்..அதுக்கு அப்புறம் நூல் பிடிச்சமாரி அப்பிடியே போனாப் போதும்...ஒவ்வொரு படிக்கட்டா ஏற ஆரமிச்சுருவோம். முடிவு? ஜெயம் தான்.
ஜெயிக்குறதுனா என்ன? ஒரு நிலையில இருந்து அடுத்த நிலைக்கு போறது தான் ஜெயித்தல்.. இப்ப இருக்குற நிலையில இருந்து ஏற்படுகிற ஒரு மாற்றம். அவ்வளவுதான்.. சின்ன மாற்றம் கூட ஒரு வெற்றி தான். எவ்வளவோ செய்யுற நம்மளால் அந்தச் சின்ன மாற்றத்த உருவாக்க முடியாதா என்ன?..
சிந்திப்போம்...செயல்படுவோம்...வெற்றி நமதே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக