நினைத்ததை எப்படி முடிப்பது? ....நினைத்ததை எப்படி அடைவது?...
தினம் தினம் எவ்வளவோ எண்ணங்கள் வருது...போது. அதில் சில எண்ணங்கள் மட்டும் நம் மனதில் பாய் போட்டு உக்காந்துகுது.. அந்த சில எண்ணங்கள் தான் நம்ம ஆசையா மாறுது. நம்மளோட இந்த ஆசைகள் எல்லாம் நிறைவேறுதா?.. நிச்சயமா இல்ல. சில ஆசைகள நாமளே இது நடக்காதுனு ஒழிச்சு கட்டிருப்போம்.. சில ஆசைகள நம்ம சுத்தி இருக்குறவங்க ஒழிச்சு கட்டிருப்பாங்க. மிச்சம் மீதி இருக்குற சில ஆசைகள் போனாப்போதுனு நிறைவேறிருக்கும்...பல ஆசைகள்? நம்மோட மனசுக்குள்ள நின்னு குடைச்சல குடுத்துக்கிட்டேயிருக்கும். மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம நம்மள ஒரு வழி பண்ணிரும்.. அந்த ஆசைகள் நம் வாழ்நாள் முழுசும் மனசுக்குள்ள உக்காந்துக்கிட்டு பிராண்டிக்கிட்டே இருக்கும். நாமளும் நமக்கு விதிச்சது இவ்வளவு தான்னு நம்ம எல்லைகளை நாமளே குறுக்கிக்குவோம். உண்மையிலேயே இவ்வளவு தானா நாம? இதுக்கு தான் நாம பொறந்துருக்கோமா...?இல்லை....நிச்சயமா இல்லை....குண்டு சட்டிக்குள்ள அடைக்கப்பட்டது இல்ல நம்ம வாழ்க்கை.. நமக்காக பரந்து விரிந்த வானமும் பூமியும் காத்துக்கிட்டு இருக்கு..நம்ம வேலயெல்லாம் சிறகு விரிக்குறது மட்டும் தான். இத செய்யுறதுக்குத் தான் நாம தயங்குறோம்...எதுக்காக தயங்குறோம்?..
பயம் தான் நம்ம தயக்கத்துக்குக் காரணம்...சிறகு விரிக்குறப்ப வலிச்சா? சிறகு சரியா விரியலைனா? நம்ம சிறகு சின்னதா இருந்தா? நம்மளால மத்தவங்க மாரி பறக்கமுடியலைனா? இப்பிடி ஏகப்பட்ட சந்தேகங்கள் நமக்குள்ள இருந்துகிட்டு இருக்கு...
இந்த சந்தேகங்கள் தான் பயமா வெளிப்படுது..சந்தேகங்கள் இரத்தத்தை உறிஞ்சுற அட்டை மாதிரி...நம்ம நிம்மதி,சந்தோசம்,முயற்சி, எல்ல்லாத்தையும் உறிஞ்சிரும். இதுல இருந்து எப்பிடி வெளில் வரதுனு யோசிச்சா போதும்.. நமக்கு முன்னாடி இருக்குற தடைகள் எல்ல்லாம் தவிடு பொடியாகிரும்..
எப்பிடி வெளிய வர்றதுனு தெரிஞ்சா நாங்க எதுக்கு இப்பிடி இருக்கிறோம்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது... மைண்ட் வாய்ஸ்னு நினச்சுக்கிட்டு சத்தமா பேசிக்கிட்டு இருக்கீங்க ..
வெல், தயக்கங்கள உடச்சிட்டு, சாதனை படைக்கனும் நினைக்குறதே வெற்றிக்கான நல்ல அறிகுறி தான். முதல்ல நாம, நம்மள நம்பனும்... நம்மளால் முடியும்னு நம்பனும்... இந்த உலகத்துல யார நம்புறோமோ இல்லயோ, நம்மள முழுசா நம்பனும். நம்மள நாம நம்பலைனா வேற யாரு நம்புவா? நம்பிகை தான் முக்கியம் இங்க ... வெற்றியாளர்களாத்தான் பொறந்தோம்ங்றத மறந்திரக்கூடாது ...இடையில கொஞ்சம் பாதை மாறிட்டோம். இப்ப நாம எந்த நிலைல இருக்குறோமோ அந்த நிலைல இருந்து முயற்சிகள தொடங்கினாப் போதும்..தொடர் முயற்சிகள் கண்டிப்பா திருவினையாகும்.
நம்மள நம்புனா மட்டும் போதுமானு கேட்டா இல்ல .. நம்மள நம்பத் தொடங்கிட்டாலே, நம்ம மனசு நம்ம கனவுகளையும் ஆசகளையும் எப்பிடி அடையாலாம்னு திட்டமிட ஆரமிச்சுரும்.. நம்முடைய தீவிரமான ஆசைகள் நம்மள தன்னை நோக்கி இழுக்கும். அதனால, நம்ம மனசும் தீவிரமா, முழு உணர்வு நிலைல, திட்டங்கள தீட்டி, அத செயல்படுத்தவும் தொடங்கிரும்.. அப்புறமென்ன எல்லாம் சுபம் தான்..
ஒரு திட்டம் நிறைவேற, திட்டத்தோட முழுப் பகுதியும் தெரியனும்னு அவசியமில்ல. அடுத்து என்ன செய்யனும்னு தெரிஞ்சாப் போதும். ஒவ்வொரு அடியும் நம்மள முன்னோக்கி இழுத்துட்டுப் போயிரும்.
முழு உணர்வு நிலைனா என்னன்னா, நாம ஒருத்தர் மேல் கோவப்படுறப்ப எந்த வித தயக்கமோ, தடுமாற்றமோ இல்லாம, முழுமையான கோவப்படுவோம்ல அதான் முழுமையான நிலை.. சில சமயங்கள்ல பல நாட்களுக்கு அந்த கோவத்தோட வீரியம் கொஞ்சம் கூட குறையாம இருக்குமல்லவா ... ,அது மாரியான நிலை. நம்மளுடைய குறிக்கோளை அடைந்தே தீரவேண்டும் என்ற தாகத்தின் வீரியம் முழுவீச்சுல இருக்கனும்.
இந்த மாரி தீவிரமான மனநிலைல நாம் என்ன கேட்டாலும் உடனே அது நமக்கு கிடைக்கும். நமக்கும் மேல ஒரு சக்தி இருக்குது...அது கடவுளோ இல்ல பிரபஞ்ச சக்தியோ எதுவானாலும், கண்டிப்பா நாம கேட்டத கொடுத்துத் தான் தீரும். கொடுப்பதை தவிர அதுக்கு வேற வழி கிடையாது.சோ, நாம விரும்புறத, ஆசப்படுறத, முழுசா நம்பனும்...அடுத்து அதற்க்கேற்ப செயல் படனும்.இது இரண்ட செஞ்சாலே போதும்..நாம நினச்சது நமக்கு நடக்கும்.
இதத்தான் அப்துல் கலாம் ஐயாவும் கனவு காணுங்கள்னு சொன்னாரு. நமக்கு அது சரியா புரியாததுனால நாம அத பெரிய விசயமா எடுத்துக்கல.. இப்ப தெரிஞ்ச பிறகு தாமதிக்காம உடனடியாக செயல்படுவோம் . தடைகளை தகர்த்து, வெற்றியை நம் கைக்குள் அடைத்து வாகை சூடுவோம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக